மிருத்யுஞ்ஜய ஹோமம்
விளக்கம்
ம்ருத சஞ்சீவனி ஸூக்தம் மற்றும் இந்த்ராக்ஷீ சிவ கவசத்துடன் செய்யப்படும் மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம் சிவனின் அருளாசி பெறுவதற்கு செய்யப்படும் ஹோமம் ஆகும். இந்த மூன்றையும் இணைத்து நடத்தும் இந்த வைபவத்தின் மூலம் மரண பயம் அகல்கின்றது. மோட்சத்திற்கு வழி வகுக்கின்றது. இந்த ஹோமத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல்மிக்க அதிர்வலைகள் நமது உயிரின் ஒவ்வொரு அணுவிலும் கலந்து நம் மனதிலும், நம்மைச் சுற்றிலும் சூழ்ந்திருக்கும் அறியாமையை விலக்குகின்றது.
மிருத்யுஞ்ஜய ஹோமத்தின் நற்பலன்கள்
நோய்கள் அகன்று, ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும்.
நீண்ட ஆயுள் கிடைக்கும்.
பிறப்பு, இறப்பு என்ற சுழலிலிருந்து விடுபட இயலும்.
தீமைகளை வெல்லும் ஆற்றல் கிடைக்கும்.
உங்கள் உள்ளும், புறமும் சக்தி பிறக்கும்.
பலமும், மன வலிமையும் பெருகும்.
மரணபயம் விலகும்.
குறிப்பு: பூஜை மற்றும் ஹோமத்திற்கான கட்டண முறைகளை அறிந்துகொள்ள எங்களை தொடர்புகொள்ள : +91 9025 809914