
வாழைப்பழம், மிகவும் சத்தான பழங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வாழைப்பழத்தில் செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், பச்சைப்பழம், மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி என எண்ணற்ற வகைகள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, பொட்டாசியம், மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இதில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் கனிமச்சத்துகள் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கிறது. இத்தகைய வாழைப்பழத்தை இரவு தூங்குவதற்கு முன் யார் யார் சாப்பிடக்கூடாது, யார் யார் சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.
யார் யார் சாப்பிடக்கூடாது
வாழைப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிடுவது நல்லதல்ல. அத்துடன் இதை இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில், இது சளிப்பிடிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். எனவே, ஆஸ்துமா, சைனஸ், சளி மற்றும் இருமல் பிரச்சனை உள்ளவர்கள் இரவில் வாழைப்பழங்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அதேபோல், வயதானவர்களும், நீரிழிவு நோய் உள்ளவர்களும் இரவு நேரங்களில் வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது.
யார் யார் சாப்பிடலாம்
மாலை வேளையில் வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம், இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
வாழைப்பழம் சாப்பிட்டு, ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் எளிதில் உடல் எடையைக் குறைக்கலாம்.
12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இரவில் வாழைப்பழத்தை கொடுப்பது நல்லது.
மேலும், விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்பவர்கள் இரவு உணவிற்கு பின் வாழைப்பழம் சாப்பிடுவது மிகுந்த நன்மையைத் தரும்.
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் (ஷேர் செய்யுங்கள்).