download_indicator

ஒரு பிடி விபூதி... ஆயிரம் மடங்கு பேரருள்!

"மந்திரமாவது நீறு

வானவர் மேலது நீறு..."

 

என்று திருஞானசம்பந்தப் பெருமானால் போற்றிப் பாடப்பட்டது திருநீறு…

சைவ சமயத்தின் மிக முக்கிய அடையாளமாக விளங்குவது திருநீறு…

 

ஆன்மீக ஆற்றலின் ஊற்றாகவும் திகழ்வது திருநீறு…

 

சிவபெருமானின் திருமேனியில் துலங்கும் இந்தத் திருநீறு, மனிதனின் ஆணவத்தை நீக்கி, மனத்தூய்மையையும் அமைதியையும் தரவல்லது.

சனிப் பிரதோஷமும் திருநீற்றுக் கொடையும்

பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவதும், ஆலய வழிபாட்டிற்குத் தேவையான பொருட்களை உபயமாக வழங்குவதும் அளவிடற்கரிய புண்ணியத்தைத் தரவல்லது.

 

குறிப்பாக, சனிப் பிரதோஷ நாளில் செய்யப்படும் திருநீற்றுக் கொடை (விபூதி தானம்), குடும்பத்தில் அமைதியையும், காரிய சித்தியையும், மனநிம்மதியையும் கூட்டும் என்பது ஆன்மீக நம்பிக்கை.

 

இத்தகைய மகிமை வாய்ந்த நன்னாள் நெருங்கி வருகிறது (27 ஜூன் 2026, சனி), தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க 108 சிவாலயங்களுக்குத் விபூதியைச் சமர்ப்பிக்கும் திருநீற்று தானக் கைங்கரியம், நமது மெய்யன்பர்கள் துணையோடு பல மாதங்களாக நடைபெற்று வருகின்றன...

உங்களுக்கும் விருப்பமா?

இந்த சிவ கைங்கரியத்தில் உங்களையும் சேர்த்துக் கொள்ள விருப்பமா?

ஒவ்வொரு சிவாலயத்திற்கும் தலா அரை கிலோ (0.5 Kg) வீதம், வாசனை மிகுந்த தூயவிபூதி சமர்ப்பிக்க உள்ளோம்.

 

மெய்யன்பர்கள் அனைவரும் தங்களின் வசதிக்கேற்ப இத்திருநீற்றுக் கைங்கரியத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.

 

ஒரு சிவாலயத்திற்குத் தேவையான விபூதியை முழுமையாக வழங்கலாம்.

 

இரண்டு சிவாலயங்களுக்குத் தேவையான விபூதியை உபயமாக வழங்கலாம்.

 

தங்களால் இயன்ற சிறு தொகையையும் காணிக்கையாக அளித்து இப்புனிதப் பணியில் பங்கெடுக்கலாம்.

ஏன் இந்தச் சேவை?

ஆலயங்களில் தினசரி வழிபாடுகள் தடையின்றி சிறப்பாக நடைபெறவும், அங்கு வரும் பக்தர்களுக்குத் திருநீற்றுப் பிரசாதம் தடையின்றி கிடைக்கவும் இச்சேவை உறுதுணையாக இருக்கும்.

 

நமது சிறிய பங்களிப்பும் பெரிய சிவபுண்ணியத்தைத் தேடித்தரும்.

 

வாருங்கள், இப்புனிதச் சனிப் பிரதோஷ நன்னாளில் நம்மால் இயன்ற திருநீற்றுக் காணிக்கையைச் சமர்ப்பித்து, எல்லாம் வல்ல ஈசனின் பேரருளைப் பெறுவோம்!

 

திருச்சிற்றம்பலம்! சிவாய நம!

 


Follow Us on