
ஹெலோ நண்பர்களே!
தேங்காய் பால் நம் பாரம்பரிய உணவில் முக்கியமான இடம் பிடித்த ஒரு இயற்கை பானம். இந்த கட்டுரையில், வெறும் வயிற்றில் தேங்காய் பால் குடிக்கலாமா? அதன் நன்மைகள் என்ன? எப்போது தவிர்க்க வேண்டும்? என்பதைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.
தேங்காய் பாலில் உள்ள சத்துகள்
மாங்கனீசு, பொட்டாசியம்
புரதம், பாஸ்பரஸ்
தாமிரம், செலினியம்
வைட்டமின்கள் (A, D, E, K)
நார்ச்சத்து
ஆரோக்கியமான கொழுப்பு
வெறும் வயிற்றில் குடிக்கலாமா?
ஆம், குடிக்கலாம்… ஆனால் அளவுடன் பருக வேண்டும். வெறும் வயிற்றில் தேங்காய் பால் குடிப்பதால் சில நன்மைகள் கிடைக்கும்.
நன்மைகள்
உடல் சூட்டை குறைக்க உதவும்.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகளில் நிவாரணம் தரலாம்.
சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு நல்லது.
கவனிக்க வேண்டியவை
தேங்காய் பால் கலோரி மற்றும் கொழுப்பு அதிகம் கொண்டது. அதிகமாக குடித்தால், செரிமான கோளாறு, வாய்வு பிரச்சினை போன்றவை ஏற்படலாம்.
காலை உணவுடன் சேர்த்து சாப்பிடுவது எப்படி?
வெறும் வயிற்றில் குடிப்பதற்கு பதிலாக, அரை தேங்காய் + 2 வாழைப்பழம் சேர்த்து சாப்பிடலாம். இது உடலுக்கு சீரான சக்தி தரும்.