மருத்துவ குணங்கள் கொண்ட வெண்தாமரை!

நாட்டின் தேசிய மலராக கருதப்படுகிற தாமரைப் பூ மருத்துவ தன்மை கொண்டதாக இருக்கிறது. சிவபெருமான், அம்பாளுக்கு உகந்த பூவாகவும், லட்சுமி வாசம் செய்யும் மலராகவும் திகழ்கின்ற தாமரைப் பூ அனைத்து தெய்வங்களின் பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதில் செந்தாமரை என்றும், வெண்தாமரை என்றும் இருவகையுண்டு. பெரும்பாலும், கோயில் குளங்களில் காணப்படுகின்ற இந்த வெண்தாமரை ஓட்டமில்லாத நீர் நிலைகளில் மட்டுமே வளரும் தன்மை கொண்டது. வெண்தாமரையின் வேர், பூ, இலை, விதை, நார் இலைகள் அனைத்தும் மருத்துவத்தன்மை வாய்ந்ததாகும். அதையடுத்து, வெண்தாமரையின் பயன்கள் குறித்து பார்க்கலாம்.

பயன்கள்

வெண்தாமரை விதைகள், சிறுநீர் பெருக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். தண்டு, இலை ஆகியவை செரியாமை, பேதி ஆகியவற்றைக் குணமாக்குவதாக கூறப்படுகிறது.

வெண்தாமரை பூ, உடல் வெப்பத்தால் ஏற்படும் கண் எரிச்சல், காய்ச்சல், நீர்வேட்கை ஆகியவற்றைக் குணமாக்க கூடும்.

வெண்தாமரை, சுக்கு, ஏலக்காய், ஒரிதழ் தாமரை அனைத்தையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து, தினமும் இரண்டு கிராம் பொடியை காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் அனைத்தும் குணமாக வாய்ப்புள்ளது.

கர்ப்பிணிகளுக்குப் பசி எடுக்க வெண்தாமரைப்பூவை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, பசும்பாலில் கரைத்து சாப்பிட கொடுக்க வேண்டும்.

வெண்தாமரையின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து பனை வெல்லம் கலந்து அருந்தி வந்தால் பித்தத்தைக் குறைக்கும்.

நீர்ச்சுருக்கு, நீர்த்தாரை எரிச்சல் போன்றவற்றைப் போக்கும். சுரக் காய்ச்சலுக்கும் இதனைக் கொடுத்து வந்தால் காய்ச்சல் படிப்படியாகக் குறையும்.

வெண்தாமரை, ஆவாரம் பூ இவை இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால் வெட்டைச்சூடு தணியும்.

ஞாபக சக்தியைத் தூண்டும். மூளைக்கும், நரம்புகளுக்கும் புத்துணர்வூட்டும். வயிற்றுப் புண் ஆறக்கூடும். சரும எரிச்சலைப் போக்கும் தன்மை கொண்டது.

இதயத்தைப் பாதுகாக்கும். இதய தசைகளை வலுப்படுத்தும். இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.

வெண்தாமரையுடன் சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து கஷாயம் வைத்து இரவு படுக்கும் பொழுது குடித்து வந்தால் நன்றாகத் தூக்கம் வரும்.

வெண்தாமரைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால் இருமல், அதிக உதிரப் போக்கு போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கும்.

வெண்தாமரைப்பூ, இலை, தண்டு, கிழங்கு ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து அதனை நன்றாக சாறு பிழிந்து அரை கிலோ நல்லெண்ணையில் கலந்து அடுப்பில் கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்த உடன் அதனை இறக்கி ஆற வைத்து காற்றுப் புகாத பாட்டிலில் அடைத்து வைக்கவும். தினமும் அதை தலைக்கு தேய்த்து ஊற வைத்து குளித்து வர மங்கிய கண்பார்வை தெளிவுறும்.

வெண்தாமரைப் பூ மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது என சித்தர்கள் பலர் கூறியுள்ளனர்.

வெண்தாமரைப் பூக்களை காய வைத்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். தினசரி 5 டீஸ்பூன் பொடியை ஒன்றரை டம்ளர் நீரில் போட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சவேண்டும். அதனை வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு தடவை சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் சீராகும்.

வெண்தாமரை பூஜை செய்வதற்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது என்பதை உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.(ஷேர்)



Follow Us on