மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் தோன்றிய வெள்ளரிக்காய் மலைப்பகுதிகளில் நன்கு வளர்கிறது. பொதுவாக, வெப்ப மண்டல பகுதிகளில் அதிகம் விளைகிற வெள்ளரிக்காய், அனைவரும் விரும்பி சாப்பிடும் காய் வகையில் ஒன்றாக இருக்கிறது. இது, உடலுக்குக் குளிர்ச்சி தரும் காயாகவும் உள்ளது. வெள்ளரிக்காயில், கோ. 1, ஜப்பானி லாங் கிரின், ஸ்ரோயிட் எய்ட், பாயின்செட்டி போன்ற ரகங்கள் உள்ளன. வெள்ளரிக்காயில் பல்வேறு சத்துக்கள் கிடைக்கின்ற நிலையில், அதில் இருக்கும் விதையின் பயன்கள் குறித்து பார்க்கலாம்.
பயன்கள்
வெள்ளரி விதையை வெள்ளரிக்காயுடன் சேர்த்து அரைத்துச் சாறு அருந்த ஆண்மை பெருகும்.
பித்தநீர், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல் மற்றும் நீர் சுறுக்கு, கல்லடைப்பு போன்றவற்றை குணமாக்குகிறது.
சிறுநீர் பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளரி விதையுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து தொப்புளைச் சுற்றி பற்றுப்போட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
வெள்ளரி விதையில் நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற பல சத்துக்கள் இருப்பதால், சரும வறட்சியைப் போக்கி, சருமத்தைப் பளபளப்பாக மாற்றவும், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
வெள்ளரி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் அடைப்பு, சதை அடைப்பு, சிறுநீர்க் குழாய் எரிச்சல் போன்றவை குணமாகும்.
புற்றுநோயைத் தடுக்கும் சக்தியை கொண்டுள்ளது.
வெள்ளரிக்காய் பிடிக்காது என்று கூறும் உங்களது சகோதர, சகோதரிகளுக்கு இக்கட்டுரையை அனுப்பி வெள்ளரி விதையின் மகத்துவத்தை அறிய செய்யுங்கள்.(ஷேர்)