
வேலை தான் ஒருவரின் அந்தஸ்தைத் தீர்மானிக்கிறது. சமூகத்தில் அவருக்குக் கிடைக்கும் மரியாதை, வாழ்க்கை போன்றவற்றை தீர்மானிப்பது அவருக்கு அமையப்போகும் வேலையை வைத்து தான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வேலை என்றால் எல்லோருக்கும் ஏதோ ஒரு வேலை நிச்சயம் கிடைத்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், எல்லோருக்கும் விரும்பிய வேலை கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான். ஒருவருக்கு மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்க திறமை மட்டும் இருந்தால் பத்தாது. தெய்வத்தின் அருளும் நிச்சயம் உடன் இருக்க வேண்டும். தெய்வ அருள் இல்லாதவர்களுக்கு கடைசி வரை மனதிற்குப் பிடித்த வேலை அமையாமல் வேதனையில் தவிப்பார்கள். இன்றைக்கு பட்டப்படிப்பு படித்தவர்களை விட, சாதாரண படிப்பு படித்தவர்கள் கூட அதிகமாக சம்பாதிக்கிறார்கள். அதையடுத்து, திறமைக்கு உரிய வேலை கிடைப்பதற்கு சொல்ல வேண்டிய மந்திரம் குறித்து பார்க்கலாம்.
சுப்பிரமணிய சுவாமி
முருகப்பெருமானின் அவதாரமாக இருக்கும் சுப்பிரமணிய சுவாமியை வணங்க நல்ல தீர்வு கிடைக்கும்.
சுப்பிரமணிய சுவாமி படத்தை வீட்டில் வைத்து முருகப்பெருமானை வணங்குபவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும்.
சாதனை புரிய நினைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
சுப்பிரமணிய சுவாமி ஸ்லோகத்தை அதிகாலையில் எழுந்து குளித்து சுப்ரமணிய சுவாமி படத்தின் முன் நின்று கொண்டே 108 முறை கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
இது போல் தினமும் செய்து வர நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் நல்ல வேலை நிச்சயமாக கிடைக்கும்.
ராஜராஜஸகோத் பூதம்!
ராஜீவாயத லோசனம்!
ரதீசகோடி ஸௌந்தர்யம்!
தேஹிமே விபுலாம் ச்ரியம்!!
நம்பிக்கையுடன் முருகப்பெருமானை வணங்கி தொடர்ந்து 48 நாட்களுக்கு, 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் தகுதிக்கு ஏற்ப நல்ல வேலை அமையும்.
நமக்கு எவ்வளவு தான் திறமைகள் இருந்தாலும் தெய்வத்தின் அருள் இன்றி எதையுமே சாதிக்க இயலாது என்பதை ஒரு போதும் மறந்து விடாதீர்கள்.
இந்த மந்திரத்தை உச்சரித்து முருகனின் விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டு பின்னர் வெளியில் செல்லுங்கள். செல்லும் காரியம் நிச்சயம் வெற்றி பெறும்.
அதேபோல், மகாலட்சுமிக்குரிய கீழ்க்கண்ட மந்திரத்தை தொடர்ந்து 48 நாட்களுக்கு குறைந்த பட்சம் 11 முறை படித்து வர நல்ல வேலை கிடைக்கும்.
ஸ்ரீதேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா
விஷ்ணுபத்நீ வைஷ்ணவீச வராரோஹாச்ச சார்ங்கிணீ
ஹரிப்ரியா தேவதேவீ மஹாலக்ஷ்மீச சுந்தரீ
இம்மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல வேலை கிடைப்பதோடு, பதவி உயர்வு கிடைப்பது நிச்சயம்.