download_indicator

வீட்டிற்குள் ஆந்தை வந்தால் என்ன பலன்?

பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று கூறப்படுவது போல், பறவைகள் வகையை சேர்ந்த ஆந்தை ஒரு விரும்பத்தகாத பறவையாக பழங்காலம் முதற்கொண்டே தென்னிந்தியாவில் கருதப்படுகிறது. பொதுவாக ஆந்தை வீட்டினுள் நுழைவதை தென்னிந்தியர்கள் விரும்புவதில்லை. ஆனால், வட இந்தியாவில் ஆந்தையை காண்பது நல்லதென கருதுகின்றனர். ஆந்தை பெரும்பாலும் இரவு நேரங்களில் மட்டுமே இறைதேட செல்லும். ஆந்தையின் குரல் பயத்தை கொடுக்கக்கூடியது. எனவே யார் வீட்டின் மீதாவது ஆந்தை அமர்ந்து கத்தினால், அந்த வீட்டில் நடக்க இருக்கும் ஆபத்தை முன்கூட்டியே தெரிவிக்கிறது என்ற நம்பிக்கை இன்றும் பரவலாக இருக்கிறது. அதனால்தான் ஆந்தையின் ஒலிக்கு பஞ்சாங்கத்தில் பலன் பார்க்கும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆந்தை விவசாயிகளுக்கு பல விதங்களில் நன்மை செய்கிறது. இது வயல்வெளிகளில் உள்ள எலிகளை பிடித்து உணவாக உட்கொள்வதால் எலிகளின் தாக்கத்திலிருந்து வயல்கள் பாதுகாக்கப்படுகிறது. மேலும் செல்வத்திற்கு அதிபதியாக திகழும் மகாலட்சுமியின் வாகனமாக ஆந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து வீட்டிற்குள் ஆந்தை வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

வட இந்தியாவில்

வட இந்தியர்களை பொறுத்தவரை ஆந்தை ஒரு மங்களகரமான பறவையாக கருதப்படுகிறது.

வட இந்தியர்கள் தீபாவளி அன்று இரவில் தம் வீட்டிற்கு ஆந்தை வருவதை சுப சகுனமாக கருதுகின்றனர்.

தீபாவளி மட்டுமல்லாமல் சாதாரண நாட்களிலும் வெளியில் கிளம்பும் போது ஆந்தை கண்ணில் பட்டால், தொடங்கும் செயலில் வெற்றி நிச்சயம் என நம்பிக்கை அடைகின்றனர்.

ஆந்தை, இரவில் ஒரு வீட்டில் அமர்ந்து குரல் எழுப்பினால், அந்த வீட்டில் பொருளாதாரம் அதிகரிக்கும் என்று உறுதியாக நம்புகின்றனர்.

ஒருவர் வீட்டிற்கு வந்த ஆந்தை அங்கேயே கூடு கட்டி இரவு பகலாகக் குரல் கொடுத்தாலோ அல்லது ஒரு கோயிலில் கூடு கட்டி குரல் கொடுத்தாலோ அந்தப் பகுதியில் வாழும் அனைவருக்கும் லட்சுமி கடாட்சம் நிச்சயம் என்று நம்புகின்றனர்.

பலன்கள்

சூரியனின் எண்ணாகிய ஒரு முறை குரல் கொடுத்தால் ஆயுள் விருத்தியடையும்.

சந்திரனின் எண்ணாகிய இரண்டு முறை குரல் எழுப்பினால் நற்பலன் விளையும். செய்யும் செயலில் வெற்றி கிட்டும்.

மூன்று குருவின் எண் என்பதால், விரைவில் திருமணம் நடக்கும்.

நான்கு ராகுவின் எண் என்பதால், எதிர்பார்த்த முன்னேற்றம் விரைவில் கிடைக்கும்.

புதனின் எண் ஐந்து என்பதால், குடும்பத் தலைவருக்கு பயணத்தால் யோகம் உண்டாகும்.

சுக்கிரனின் எண் ஆறு என்பதால் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும்.

கேதுவின் எண்ணாகிய ஏழு முறை குரல் எழுப்பினால் மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

சனியின் எண் எட்டு என்பதால், நோயுற்றவர்கள் விரைவில் குணமடைவார்கள்.

செவ்வாயின் எண் ஒன்பது என்பதால், குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் உண்டாகும். நல்ல செய்திகள் வரும்.



Follow Us on