வீட்டின் நிலை வாசலில் இருக்க வேண்டிய சில மங்கல பொருட்கள்

நிலை வாசலில் முழு முதற் கடவுளான விநாயகர் படம் கட்டாயம் இருந்தால் அந்த வீடு சுபிட்சம் அடையும்.

வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்க தலை வாசலில் மஞ்சள், குங்குமம் இடுதல் வேண்டும். செய்ய முடியாதவர்கள் அல்லது செய்ய அனுமதி இல்லாதவர்கள் தலை வாசல் கதவின் நடுவில் வட்டமாக சிறிதளவு மஞ்சள் வைத்து அதில் குங்குமம் வைத்துக் கொள்ளலாம். நிலை வாசலில் குலதெய்வம் குடியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. எனவே, அவற்றிற்கு மஞ்சள், குங்குமம் இடாமல் இருப்பது அவ்வளவு நல்லதல்ல.

முருகனுடைய அருளாசியை நமக்கு பெற்று தரும் மயில், வேல், பிரணவ மந்திரமான ஓம் ஆகிய சின்னங்களில் ஏதாவது ஒன்றை வீட்டின்நிலை வாசலில் பொறித்து வைக்கலாம். பொம்மையாகவோ அல்லது ஸ்டிக்கராகவோ கூட ஒட்டி வைக்கலாம்.

நிலை வாசலில் குதிரைப்படம் அல்லது குதிரை லாடம் போன்றவற்றை மாட்டி வைப்பதும், அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் விஷயங்களாக இருக்கிறது.

அம்பாளுடைய அருளாசியைப் பெற வீட்டின் நிலைவாசலில் திரிசூலம் வைத்திருப்பது அதிர்ஷ்டத்தை தரும். அரக்கர்களை அழிக்கும் திரிசூலம் நம் வீட்டின் திருஷ்டியை போக்கும் அற்புத ஆற்றல் படைத்த ஒரு சின்னம் ஆகும். எனவே உங்கள் கைகளால் நீங்களே மஞ்சள், குங்குமத்தால் திரிசூலம் வரைந்தும் வைக்கலாம்.

யானை விநாயகரையும், ஆன்மீக பலத்தையும் குறிப்பதால் யானை உருவங்கள், படங்கள், மற்றும், பொம்மைகளை வாங்கி வீட்டின் நுழைவாயிலில் வைப்பது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும், நேர்மறை ஆற்றல்களையும் பெருக செய்யும்.

வீட்டின் வாயிலைப் பார்த்தவாறு சிரிக்கும் புத்தர் (லாபிங் புத்தா) எனப்படும் புத்தரின் சிலையை வைப்பதன் மூலம் செல்வ வளம் சேரும்.

வீட்டு வாசலின் முன்பே ஒரு குடுவையில் நீரூற்றி அதில் மலர்களை நிரப்பி வைப்பது நல்லது. அந்தக் குடுவையில் உள்ள மலர்கள் நம் வீட்டிற்கு நல்ல நேர்மறை சக்தியை கொண்டு வரும். குடுவையில் உள்ள நீரையும், மலரையும் தினமும் மாற்ற வேண்டும்.

மாவிலைத் தோரணம் விசேஷ நாட்களில் மட்டும் தான் கட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. விசேஷம் அல்லாத நாட்களில் கூட மாவிலைகளை நம் வீட்டு வாசலில் தோரணமாக தொங்கவிடுவது நல்லது. அது துர்சக்திகளை நம் வீட்டின் உள்ளே அண்டவிடாது.

குறிப்பு

வாயிலை ஒட்டி துடைப்பம், செருப்புகள் இருக்கக் கூடாது. கண்ணாடியைச் நுழைவாயிலுக்கு எதிரே மாட்டுவது வழக்கம். உள்ளே வருகின்ற நல்ல சக்தியைப் பிரதிபலித்து இது வெளியே அனுப்பி விடும். ஆகவே கண்ணாடியை நுழை வாசலுக்கு எதிரே மாட்டக் கூடாது.



Follow Us on