
பெருமாளுக்கு உகந்த தினங்களில் ஏகாதசி தினத்தை போன்றே, திருவோண நட்சத்திர தினமும் கருதப்படுகின்றது. ஏகாதசியன்று விரதமிருந்தால் எவ்வாறு மோட்சம் கிடைக்குமோ, அதுபோன்று திருவோணத்தன்று விரதமிருப்பவர்களின் வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கி செல்வசெழிப்பு கிடைக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியுடன் கூடிய நல்ல மணவாழ்க்கை அமையும்.
எதற்காக திருவோண விரதம்?
வாமன மூர்த்தியின் அவதார நட்சத்திரம் திருவோணம் என்பதால், இந்நாளில் மகாவிஷ்ணுவை விரதமிருந்து வழிபடுவது சிறப்பாகும்.
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றும் பெருமாளை குலதெய்வமாகக் கொண்டவர்கள் பெருமாளை தரிசித்து துளசி மாலை சாற்றி பிரார்த்தனை செய்வது நல்லது.
வாமனராகவும், திரிவிக்ரமனாகவும் பெருமாள் அவதரித்தது திருவோண நட்சத்திர நாளில்தான் என்பதால், திருவோண விரதமிருப்பது வாழ்வில் வளர்ச்சியையும், அனைத்து நலன்களையும் கொடுக்கக்கூடியதாக உள்ளது.
மேலும் திருவோண விரதம் இருப்பதால், பெருமாளின் பிரியத்திற்கு பாத்திரமானவராகவும் ஆகலாம்.
இந்நாளில் விரதமிருப்பவர்களின் குழந்தைகள் அறிவில் சிறந்தவர்களாக திகழ்வார்கள்.
விரத வழிபாடு
இன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சுத்தமான ஆடைகளை அணிந்து, வாசனை மிகுந்த மலர்களை பெருமாளுக்கு சூட்டி வழிபட வேண்டும்.
குறிப்பாக துளசி இலை மாலை அல்லது துளசி அணிவிப்பது சிறந்தது.
வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
ஏகாதசி விரதத்திற்கு கடைபிடிக்கும் விரத முறைகளையே திருவோண விரதத்திற்கும் கடைபிடிக்க வேண்டும்.
திருவோண விரதம் இருப்பவர்கள், மகாவிஷ்ணுவை வணங்கி அவரின் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.
விஷ்ணு புராணம், சஹஸ்ரநாமம், நாலாயிர திவ்யபிரபந்தம், ஆண்டாள் அருளிய திருப்பாவை போன்ற பாடல்களை பாராயணம் செய்யலாம்.
உணவு சாப்பிடாமல் இருக்க முடியாதவர்கள் உப்பில்லாத உணவை எடுத்துக்கொள்ளலாம்.
மாலையில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பூஜைகள் செய்து வழிபட்ட பிறகு, பெருமாளுக்கு படைத்த நைவேத்தியத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
மேலும், சுவாமிக்கு படைத்த நைவேத்திய பொருட்களை எல்லோருக்கும் விநியோகித்து மகிழலாம்.
இன்று ஒப்பிலியப்பன் கோயிலுக்கு செல்வது மிகவும் உகந்தது.
ஏனெனில், திருவோண நட்சத்திர நாளில்தான், தாயாரை ஒப்பிலியப்பன் திருமணம் செய்து, தாயாருடனேயே தங்கிவிட்டார்.
அதனால், திருவோண நாளில் ஒப்பிலியப்பனை தரிசித்திட தாயாரின் அருளும் சேர்ந்து கிடைக்கும்.
திருமணத்தடை
பல்வேறு காரணங்களால் திருமணத்தடையாகி மணமாகாமல் இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
அதேபோல், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும்.
திருவோண விரதம் இருப்பதால் கல்விச்செல்வம், மற்றும் பொருட்செல்வம் அனைத்தும் பெருகும்.
சந்திரதோஷம் நீங்கி சந்தோஷ வாழ்வு அமையும்.
ஒரு ஆண்டு முழுவதும் அதாவது, 12 திருவோண நட்சத்திர நாளில் விரதம் இருப்பவர்கள் வாழ்வில் செல்வசெழிப்பின் உச்சத்திற்கு செல்வார்கள்.
அதனால், அவர்கள் வாழ்க்கைப்பாதையே மாற்றம் பெறும்.
திருவோண விரதம் இருப்பதால் வாழ்வில் செல்வசெழிப்பின் உச்சத்துக்கு போகமுடியும் என்பதை உங்களுக்கு தெரிந்தவர்களும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.