
மாதந்தோறும் வருகிற ஏகாதசிகளில் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி, பெரிய ஏகாதசி என்று கூறுவர். மேலும், இந்நாளில் விரதமிருப்பவர்கள் அனைவருக்கும் முக்தி கிடைக்கும் என்பதால் முக்தி ஏகாதசி என்றும் கூறுவதுண்டு. இன்று வைகுண்ட ஏகாதசி தினத்தையொட்டி அதன் மகிமையையும், சிறப்பையும் காணலாம்.
முக்கோடி ஏகாதசி
மார்கழி மாதம் வளர்பிறையில் வருகிற ஏகாதசிக்கு மிஞ்சிய விரதம் எதுவும் கிடையாது என்று கிருஷ்ண பரமாத்மா கூறியதில் இருந்தே அதன் மகிமையை நாம் அறியலாம்.
தேவலோகத்தின் பிரம்ம முகூர்த்த காலமாக இருப்பதன் காரணமாகவே, தனுர் மாதம் என்றழைக்கப்படுகிற மார்கழி வளர்பிறையில் வருகிற ஏகாதசி தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
உலகம் முழுவதுமுள்ள விஷ்ணு கோயில்களின் வடக்கு திசையில் என்றும் மூடப்பட்டிருக்கும் சொர்க்க வாசல், வைகுண்ட ஏகாதசி தினமாகிய இன்று அதிகாலையில் மட்டுமே திறக்கப்படும்.
எனவே, சொர்க்க வாசல் வழியே சென்று கண்டிப்பாக இறைவனை தரிசிக்க வேண்டும்.
இந்நாளில் விரதமிருப்பவர்களுக்கு கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என 3 காலங்களிலும் நன்மையே கிடைக்கும் என்பதால் இந்த ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்றும் சிறப்பு பெயர் உண்டு.
மேலும், இன்று வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்களின் வாழ்க்கை வையத்துள் வைத்து சிறப்பிக்கப்படும்.
அதற்கு உதாரணமாக, கிருஷ்ணரின் பக்தன் அம்பரீஷன் என்ற மன்னனை கூறுலாம்.
வைகுண்ட ஏகாதசி தினம் முதல் "இராப்பத்து" விழா அனைத்து விஷ்ணு கோயில்களிலும் சிறப்பாக நடைபெறும்.
விஷ்ணு காயத்ரி மந்திரம்
“ஓம் நாராயணாய வித்மஹே
வாசஸூதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்”
வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணு காயத்ரி மந்திரத்தை குறைந்த பட்சம் 108 முறையாவது சொல்வது சிறந்தது.
அதனால், இதுவரை செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி புண்ணியம் கிடைப்பதுடன், துன்பங்கள், துயரங்கள் விலகி மகிழ்ச்சி கிடைக்கும்.
இராப்பத்து திருவிழா நாட்களில் திருக்கைத்தல சேவை, திருமங்கை மன்னரின் வேடுபறி போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அத்துடன் விஷ்ணு பகவானின் மகிமை மற்றும் சிறப்புகளை அரையர்கள் அபிநயம் செய்து ஆடிப்பாடி எடுத்து கூறுவர்.
நாளை கூடாரைவல்லி திருநாளையொட்டி ஆண்டாளை வழிபடுவதன் மூலமாக குடும்பத்தில் சுப நிகழ்ச்சி விரைவில் நடைபெறும்.
கர்ணனை போன்று
வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பதால், உடல் ஆரோக்கியம், அதிக செல்வம் கிடைக்கும்.
இன்று தானம் செய்பவர்கள், தானத்தின் பலனை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து வழிபட, கர்ணனை போன்று கொடையில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
அதனால், தேவலோகத்தில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிறைந்த சொர்க்க வாழ்க்கையும், மோட்சத்தை அடையும் பாக்கியம் கிடைக்கும்.
வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணு காயத்ரி மந்திரத்தை எத்தனை முறை கூறுவது நல்லது என்பதை உங்கள் உறவினர்களும், நண்பர்களும் அறிந்திட செய்யுங்கள் (ஷேர் செய்யுங்கள்).