வடக்கே தலை வைத்து படுக்கலாமா?

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அனைவருக்கும் தூக்கம் அவசியமாகும். அத்தகைய தூக்கம் எளிதில் வரவேண்டுமென்றால், தூங்கும் அறை அமைதியாகவும், வெளிச்சமின்றியும் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். அதேபோன்று, தூங்கும் திசையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால், திசைகளும் தூக்கத்தை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. அதையடுத்து எந்த திசையை பார்த்து தூங்குவது நல்லது. எந்த திசையில் படுத்து தூங்க கூடாது என்று பார்க்கலாம்.

நல்லதல்ல

பொதுவாக வடக்கு திசையில் தலை வைத்து தூங்குவது நல்லதல்ல என கூறப்படுகிறது.

ஒருவர் வடக்கு திசை பக்கம் தலை வைத்து தெற்கு திசை நோக்கி கால்களை நீட்டி தூங்கினால், உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்.

மேலும், செல்வம், வேலை, குடும்ப நிம்மதி போன்றவற்றை இழக்க வேண்டிய சூழ்நிலை வரும்.

இறந்தவர்களின் தலையை தான் வடக்கு திசையில் வைப்பார்கள். உயிர் பிரிந்ததும் வடக்கு நோக்கி படுக்க வைப்பது நமது மரபு. எனவே எக்காரணம் கொண்டும் வடக்கு திசையில் தலை வைத்து தூங்க கூடாது.

எதற்காக

பூமியின் வடக்கு திசையில் நேர் மின்னோட்டமும், தெற்கு திசையில் எதிர் மின்னோட்டமும் உள்ளது.

அதே போல் மனித உடலின் தலையில் நேர் மின்னோட்டமும், காலில் எதிர் மின்னோட்டமும் கொண்டது.

எப்போதும் எதிரெதிர் துருவங்கள் தான் ஈர்க்கும். ஒரே துருவங்களில் படுக்கும் போது, மின்னோட்டங்களுக்கு இடையே இடையூறு ஏற்பட்டு, உடலின் ஆற்றல் பாதிக்கப்பட்டு, உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.

அதனால், எப்போதும் வடக்கு திசை பக்கம் தலைவைத்து படுக்க கூடாது.

புகழ், செல்வம்

தெற்கு திசையில் தலை வைத்து வடக்கு திசை நோக்கி கால்களை நீட்டி தூங்கினால், புகழ், செல்வம், வெற்றி போன்றவை தேடி வருவதோடு, மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் மேம்படும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

மேற்கு திசையில் தலை வைத்து தூங்கினால், ஒவ்வொரு நாளும் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் காணக்கூடும். மேலும் இந்த திசையில் தலை வைத்து தூங்குபவர்கள் பணக்காரர்களாகவும், பெயர் புகழுடன் வாழ்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

நினைவாற்றல்

கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கும் போது, நினைவாற்றல் அதிகரிப்பதோடு, படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த முடியும்.

கணக்கு வழக்கு பார்ப்பவர்கள் கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கினால், அவர்களின் மூளை தூக்கத்திலும் சிறப்பாக செயல்படும்.

கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கும் போது, இந்த திசையில் இருந்து வரும் நேர்மறை ஆற்றல்கள், உடலுக்கு அனைத்து வகையான நேர்மறை ஆற்றலையும் வழங்கும்.

கிழக்கு திசையில் தூங்கினால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

பழந்தமிழ் இலக்கியம்

சமண சமயத்தில் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் உயிரை விட விரும்பினால், வடக்கிருத்தல் என்ற விரதத்தை மேற்கொள்வர். இதற்கு சள்ளேகனம் என்று பெயருண்டு.

நட்புக்கு இலக்கணம் வகுத்த பிசிராந்தையாரும், கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்து உயிர் விட்ட செய்தியை பழந்தமிழ் இலக்கியம் கூறுகிறது.



Follow Us on