உப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் பாதிப்புகள்?
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்வது, உப்பே இல்லாத உணவு குறித்து கூறப்படும் சொல்வழக்காகும். கடந்த முப்பது வருடங்களுக்கு முன்பு வரை உணவின் மூலம் மட்டுமே உடலுக்கு உப்பு சத்து கிடைத்தது. ஆனால், தற்போது துரித உணவுகளின் மூலம் பெறப்படும் உப்பின் அளவு கூடுதலாக இருக்கிறது. மேலும், உப்பிலும் கல் உப்பு, தூள் உப்பு, இந்துப்பு, அயோடின் சேர்த்த உப்பு, அயோடின் சேர்க்காத உப்பு என்று பலவகைகள் உள்ளன. இதில் எந்த உப்பாக இருந்தாலும் அவை அளவுக்கு அதிகமானால் ஆபத்தே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவு 4 மி.கிராம் அளவைத் தாண்டினால், அது சிறுநீரகத்தை பாதிக்கும். உணவில் உப்பை அதிகமாக சேர்த்துக் கொள்வதால் வரும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக, உடலுக்கு தேவையான உப்பின் அளவை குறைத்தால் அது உயிருக்கே ஆபத்து ஆகிவிடும். எனவே, இதற்கு தீர்வாக உணவில் சீரான அளவு உப்பு எடுத்துக் கொள்வதே சிறந்தது. அதையடுத்து, அதிக உப்பினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து பார்க்கலாம்.
பாதிப்புகள்
உப்பில் இருக்கும் சோடியமானது உடலின் நீர்த்துவ செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வேலையை செய்வதுடன், உடலின் வேறு பல பணிகளையும் சோடியம் செய்து வருகிறது. உப்பின் அளவு அதிகரிக்கும்.போது உறுப்புகளுக்கு கூடுதல் சுமை கொடுக்கும் நிலையும் உண்டாகும்.
உடலில் உப்புச்சத்து அதிகரிக்கும் போது இரத்த அழுத்தம் அதிகரிக்கும் , இதன் காரணமாக உங்களுக்கு நீரிழிவு நோய் அதிகரிக்கும். எனவே, இரத்த கொதிப்பு இருப்பவர்கள் உணவில் கட்டாயம் உப்பை குறைத்துக் கொள்ள வேண்டும்.
உணவில் உப்பின் அளவு அதிகரிக்கும்போது, புற்றுநோய் பாதிப்புகள் சிறுநீரகம், வயிறு சார்ந்த கோளாறுகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
யூரியா மற்றும் யூரிக் ஆசிட் போன்ற அமிலமும் அதிகரிக்கும்.
அதிக உப்பின் காரணமாக, வீக்கம் மட்டும் ஏற்படுவதில்லை, மேலும் பல பக்க விளைவுகளும் ஏற்படுகிறது.
இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும், மேலும் தலைவலி ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எப்படி சரி செய்யலாம்?
அதிக தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் இருக்கும் அதிகளவு சோடியத்தை வெளியேற்ற உதவும்.
பொட்டாசியம் அதிகமிருக்கும் வாழைப்பழம், ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்வதால், உடலில் இருக்கும் சோடியத்தை வெளியேற்றி இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும்.
சோடியத்தின் அளவை குறைக்கும் மற்றொரு வழி இனிப்பை சேர்த்து கொள்வதாகும்.