download_indicator

உடல் உபாதைகளை போக்கும் அகத்திக்கீரை

கீரைகளில் பல வகைகள் இருப்பினும், ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவம் உள்ளது. அந்த வகையில் அனைத்திற்கும் முதலான அகத்திக் கீரை உடலுக்குள் இருக்கும் அகத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால், இந்த கீரை அகத்தி கீரை என அழைக்கப்படுகிறது. அகத்தி மரத்தின் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன. இவ்வாறு, பல்வேறு மகத்துவம் மிக்க அகத்திக்கீரையின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

மருத்துவ பயன்கள்

1. குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும்.

2. அகத்தி கீரையின் இலையை தேங்காய் எண்ணெயில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.

3. அகத்தி கீரையைப் சாறு பிழிந்து அதன் சாற்றை 2 துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும்.

4. அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பித்தால் கடுமையான தலைவலி, சளி, ஜலதோஷம் போன்றவை நீங்கும்.

5. அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்கும்போது தொண்டைப் புண், தொண்டை வலி ஆகிய நோய்கள் நீங்கும்.

6. அகத்தி இலை மற்றும் மருதாணி இலையை சேர்த்து அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் பித்த வெடிப்பு முற்றிலுமாக மறையும்.

முக்கிய குறிப்பு

'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்ற பழமொழிக்கேற்ப இதனை வாரம் ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானது. அதிகமாக எடுத்து கொண்டால் இரத்தம் கெட்டு போக வாய்ப்பு உள்ளது. மற்ற மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது, இந்த கீரையை சாப்பிடக் கூடாது. பிற மருந்தின் வீரியத்தை இது குறைத்து விடும். வாயு கோளாறு உள்ளவர்கள் அகத்தி கீரையை தவிர்ப்பது நல்லது.

உடல் உபாதைகளை போக்கும் அகத்திக்கீரை பற்றிய தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிருங்கள்.(ஷேர்)



Follow Us on