download_indicator

உங்கள் வீட்டிலுள்ள தீய சக்திகளை விரட்ட வேண்டுமா?

வீட்டில் தீய சக்திகள், நிம்மதியை குலைக்கும் எதிர்மறை சக்திகள், சில கெட்ட ஆவிகள் போன்றவை உள்ளதா? குடும்பத்தில் ஆரோக்கியம் குறைகிறதா? இதற்கு என்ன செய்யலாம். முதலில் தீய சக்திகள் இருப்பதை எப்படி அறிவது? அறிந்து கொள்வோம் வாருங்கள்.

நிம்மதியில்லா இல்லறம்

ஒரு வீடு என்றால் அங்கு தெய்வ வழிபாடு, தீபஒளி, தாம்பத்தியம் ஆகிய மூன்றும் அவசியம் என்ற ஒரு சொலவடை கிராமங்களில் இன்றளவும் கூறப்பட்டு வருகிறது.

1.தெய்வ வழிபாடு நடக்கிறது என்றால், அங்கு தெய்வீக ஆற்றல் நிரம்பி இருக்கும் என்று அர்த்தமாகும்.

2.தீப ஒளி பரவி இருக்கிறது என்றால், அங்கு அருள் ஒளி நிறைந்து இருக்கிறது என்று அர்த்தமாகும்.

3.தாம்பத்தியம் இருக்கிறது என்றால், இல்லற வாழ்வில் அன்னியோன்னியம் நிறைந்து இருப்பதாக அர்த்தம்.

இவை மூன்றில் ஏதேனும் ஒன்று தவறும் பட்சத்தில் தீய சக்திகள் குடியேறும். சரி, ஒரு வீட்டில் துஷ்ட சக்தி இருக்கிறது என்பதை எப்படி அறிந்து கொள்வது?

அறிகுறிகள்

குடும்ப நபர்களில் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடுகளோடு இருப்பார்கள்.

அடிக்கடி தேவையில்லாத சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும்.

எந்த ஒரு செயலிலும் திருப்தி, மன நிம்மதி என்பதே இல்லாமல் இருக்கும்.

நிம்மதியான உறக்கம் என்பது இல்லாமலே போகும். உறங்கினாலும் கெட்ட கனவுகள் வரும்.

எந்த ஒரு செயலை செய்ய துவங்கினாலும், பிரச்சனைகளோடு தான் அது நிறைவு பெறும்.

மற்றவர்களும் அவ்வீட்டிற்கு வரத் தயங்குவார்கள். முடிந்தவரை தவிர்ப்பார்கள்.

என்ன செய்யலாம்

தெய்வீக ஆற்றலை மிஞ்சிய ஒரு சக்தி, உலகத்தில் இல்லை. ஒரு வீடு, ஒரு குடும்பம் என்று இருந்தால், அங்கு தெய்வ வழிபாடு என்பதும் இருக்க வேண்டும். அது எந்த மதமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவரவர், அவர்களுக்குரிய அபிமான தெய்வங்களுக்கு முடிந்தால் குல தெய்வத்திற்கு, வாரம் ஒருமுறையாவது வீட்டில் வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.

ஒருவன் பக்தி நிலையில் உயர்ந்து முக்தியை அடைந்தால், அந்நிலைக்கு வீடு பேறு என்பது பெயர். இல்லறம் நடத்தும் இடத்திற்கும் வீடு என்று தான் பெயர். எனவே தெய்வ வழிபாடு மிக மிக அவசியம்.

தினசரி வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட வேண்டும்.

வாரம் ஒருமுறையாவது வீட்டை சுத்தம் செய்து அகல்விளக்கு தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.

சூரியோதயத்தில் ஜன்னல்களைத் திறந்து வீடு முழுவதும் ஒளி நிரம்பச் செய்ய வேண்டும்.

தினசரி மாலையில், நீங்கள் வீடு வர நேரம் ஆனாலும், சிறிய மின்சார விளக்காவது எரிய வேண்டும்.

வீட்டில் குழந்தைகளின் இறைச்சல், விளையாட்டு சத்தம் இருப்பது மிகவும் சிறப்பு.

அழுக்கான ஆடைகளை சேர்த்து வைத்திருப்பது தவறு. உடனுக்குடன் துவைப்பது சிறப்பு.

ஓய்வு நாளாயினும், முடிந்தவரை ஒரு முறையாவது நீராடுவது அவசியம். உடல் தூய்மை அவசியம்.

"நீரில்லா நெற்றி பாழ்" என்றாள் ஔவை. நெற்றியில் திருநீறு அல்லது குங்குமம் இருப்பது அவசியம்.

முடிந்த வரை குடும்ப பெண்கள் அழாமல் இருக்க வேண்டும். வேதனைகளை கடக்கக் பழக வேண்டும்.

உற்றார், சுற்றம், நண்பர்கள் என பலரும் வீட்டிற்கு வந்து செல்லும் வகையில் உறவாடி மகிழ வேண்டும்.

ஆகவே, இல்லத்தை தூய்மையாக்கி, உள்ளத்தை மென்மையாக்கி, பக்தியோடும், பாசத்தோடும் இல்லறம் நடத்தினால், எந்த சக்தியாலும் நமது நிம்மதியை குழைக்க இயலாது.



Follow Us on