ஊட்டச்சத்துகள் நிறைந்த உளுந்து
இந்திய உணவில் இரண்டு வகை உண்டு. தென்னிந்திய உணவு வகை, வட இந்திய உணவு வகை.
தென்னிந்திய உணவு வகைகளில் மக்களின் பிரசித்திபெற்ற உணவு இட்லி. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவுகளில் இட்லியும் ஒன்று. இவை உடலிற்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது. இந்த இட்லியில் இவ்வளவு மருத்துவக் குணம் உள்ளதற்குக் காரணம் உளுந்துதான். அத்தகைய உளுந்தின் பயன்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்.
சத்தான உளுந்து
குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவுகளில் இட்லியும் ஒன்று. இவை உடலிற்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை பாதுகாக்கிறது. இந்த இட்லியில் இவ்வளவு மருத்துவக் குணம் உள்ளதற்குக் காரணம் உளுந்துதான். மனிதனுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்த உணவுகளுள் உளுந்தும் ஒன்று.
தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும். உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு மிகவும் நல்லது.
பயன்கள்
உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.
உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளைக்கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.
இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.
சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.
பெண்கள்
நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.
உளுந்தை தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.
உளுந்தின் பயன்களை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும், உறவினர்களுக்கும் இக்கட்டுரையை பகிருங்கள்.(ஷேர்)