download_indicator

கொல்லூரிலும், திருவிடைமருதூரிலும் உள்ள மூகாம்பிகை

பாரதம் முழுவதும் 51 சக்தி பீடங்கள் இருந்தாலும், அதையும் தாண்டி மிக முக்கியமான அம்மன் ஸ்தலங்கள் உள்ளன. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை அம்மனும் மிகுந்த சக்தி வாய்ந்தவளாக கருதப்படுகிறாள். அதையடுத்து மூகாம்பிகை அம்மனின் சிறப்பு குறித்தும், கர்நாடகத்தை போன்றே வேறு எங்கு மூகாம்பிகை அம்மன் கோயில் உள்ளது என்றும் அறிந்திடுவோம்.

தாய் மூகாம்பிகை

ஒரு அசுரனின் வேண்டுகோளுக்காக அவனது பெயரையே தனது பெயராக கொண்டுள்ள காரணத்தாலேயே தாய் மூகாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.

ஒரு சமயம் மூகன் என்ற அசுரன், கொல்லூர் மலைப்பகுதியில் அம்மனை குறித்து தவமிருந்து யாரும் வாங்காத சக்திகளை பெற முயன்றான்.

அதையறிந்த தேவர்கள் அச்சமடைந்து, பிரம்மனிடம் வேண்டுகோள் விடுத்து சரஸ்வதி மூலம் அவனை ஊமையாக்க வேண்டினார்கள்.

அதையடுத்து, தேவர்களின் சூழ்ச்சியால் மூகன், ஊமையானான்.

இருந்தாலும், தனக்கு கிடைத்த அளப்பரிய ஆற்றலால் மூகன், தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தான்.

அதையடுத்து, மூகனை வதம் செய்வதற்கு விஷ்ணு, சிவன், பிரம்மன், இந்திரன், முருகன், பூவராகன் ஆகிய 6 பேரும் அன்னைக்கு உதவினர்.

அதனால், அம்பிகை மூகனை வதம் செய்ததன் காரணமாக, அன்று முதல் தாய் மூகாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.

சிறப்பு

அன்னை மூகாம்பிகை சந்நிதியில் தங்கரேகையுடன் கூடிய ஜோதிர்லிங்கம் ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது.

இது ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீசக்கரம் என்றும் கூறப்படுகிறது.

இந்த சக்கரத்தில் ஒன்பது சக்கரம் அடங்கியுள்ளது என்றும், இதில் 64 கோடி தேவதைகள் அரூபமாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

கிரகண நேரங்களிலும் மூகாம்பிகை கோயிலின் நடை அடைக்கப்படாமல், அர்ச்சனை, ஆராதனை நடந்து கொண்டே இருக்கும்.

மூகாம்பிகை அம்மனின் சந்நிதியில் நுழைவதற்கும், பூஜை செய்வதற்கும் பிரம்மசாரி அந்தணர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எதிரிகளால் ஆபத்து எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக இங்கு சண்டி ஹோமம் நடத்தப்படுகிறது.

இந்த சண்டி ஹோமம் மிக சிறப்பு வாய்ந்தது என்பதால், இங்கு ஒரு நாளைக்கு 3 முதல் 5 சண்டி ஹோமங்கள் நடைபெறுகிறது.

மேலும், இங்கு சண்டி ஹோமம் நடத்த விரும்பினால், ஓரிரு வருடங்கள் காத்திருந்துதான் நடத்த முடியும்.

அந்தளவிற்கு இங்கு சண்டி ஹோமம் மிக சிறப்பாக நடைபெறுகிறது.

வேறு எங்கே?

கர்நாடகத்தில் கொல்லூரில் உள்ளது போன்றே, தமிழகத்தில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் உள்ள மூகாம்பிகை அம்மனை காணலாம்.

இக்கோயிலில் மூகாம்பிகை அம்மனுக்கு தனி சந்நிதி உள்ளது. இந்தியாவிலேயே கொல்லூரிலும், திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை அம்மனுக்கு சந்நிதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலில் நடத்தப்படும் சண்டி ஹோமத்தின் சிறப்புகளை உங்களுக்கு தெரிந்தவர்கள் அறிந்திட பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on