download_indicator

திருமாங்கல்யத்தை எந்த கிழமைகளில் மாற்றலாம்?

சங்க காலத்தில் இருந்தே திருமாங்கல்யம் அணியும் முறை தமிழ் சமுதாயத்தில் காணப்படுகிறது. சங்க காலத்தில் நடந்த திருமணங்களில் மணப்பெண்ணை வாழ்த்தி அவளை மணவாளனுடன் ஒப்படைக்கும் போது அதற்குச் சாட்சியாக கட்டப்படுவதே திருமாங்கல்யம். திருமாங்கல்ய சரடுக்கு தாலம் என்று மற்றொரு பெயரும் உண்டு. பின்னாளில் இது தாலியாக மாறியது. தாலியின் மகிமை மஞ்சள், கயிறு கட்டுதல் ஆகியவற்றில் அடங்கி இருக்கிறது தவிர பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை. பின்னாளில், இது பண வசதி படைத்தவர்களால் மஞ்சளானது, பொன்னாக மாறியது.

திருமண மந்திரம்

மணமகன், மணமகளுக்கு தாலி கட்டும் சமயத்தில் கீழ்கண்ட மந்திரம் சொல்லப்படுகிறது. அம்மந்திரம் பின்வருமாறு :-

‘மாங்கல்யம் தந்துனானேன

மமஜீவன ஹேதுநா!

கண்டே பத்நாமி ஸுபகே

த்வம ஜீவ சரதஸ்சதம்’

மங்களகரமானவளே, உன்னோடு இல்லற வாழ்வு நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பதற்காக இந்த திருமாங்கல்ய சரடை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் மனைவியாக, என்னுடைய சுக துக்கங்களில் பங்கு கொள்பவளாக சுபயோகங்களுடன் நூறாண்டு காலம் வாழ்க என்பதே இதன் பொருள். இந்தக் கருத்தை உணர்ந்து மணமகனும் தாலிகட்டினால் மணவாழ்வில் எல்லா நாளும் இனிய நாளே.

திங்கள், செவ்வாய், வியாழன்

இத்தகைய சிறப்பு மிக்க மாங்கல்ய தாலி கயிறு பழசாகி விட்டால் அதை மாற்றுவது பெண்களின் வழக்கம்.

ஒரு சிலர், மாங்கல்யம் பழுதானால் புது மாங்கல்யத்தை செய்து அணிவது வழக்கம். அவ்வாறு மாற்றுவதை திங்கள், செவ்வாய் அல்லது வியாழக்கிழமைகளில் செய்வது நல்லது.

கிழக்கு நோக்கி

மாங்கல்யத்தை அல்லது மாங்கல்ய கயிற்றை மாற்ற நினைப்பவர்கள் காலை உணவை அருந்தாமல், மேலே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு நாளில் கோயிலுக்கு சென்று கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது நல்லது.

இப்படி செய்வதன் மூலம் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர் என்பது ஐதீகம்.

மாங்கல்ய கயிற்றையோ அல்லது மாங்கல்யத்தையோ கண்டிப்பாக ராகு காலம், எமகண்டம் போன்ற நேரத்தில் மாற்றவே கூடாது.

மேலும் மாங்கல்யத்திலும், மாங்கல்ய கயிற்றிலும் அதிகமாக அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வது பெண்களின் முக்கியக் கடமை ஆகும்.



Follow Us on