download_indicator

தோல்விகளை தவிர்க்க வைக்கும் தேய்பிறை பிரதோஷம்

சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ விரதம் இருப்பதால், எத்தகைய கண்திருஷ்டி, தீவினை பாதிப்பு இருந்தாலும் அவை நீங்குவதுடன், தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருபவர்களுக்கு வெற்றிமுகம் கிடைக்கும். நம்பிக்கையோடு சிவபெருமானை வணங்குபவர்களுக்கு நிச்சயமாக வாழ்வில் உயர்வான நிலையை அடையக்கூடிய பாக்கியம் கிடைக்கும். அதையடுத்து இன்றைய ஆடி தேய்பிறை பிரதோஷத்தின் சிறப்புகளையும், பலன்களையும் அறிந்திடுவோம்.

சிவபுராணம்

அம்மன் மற்றும் முருகனுக்கு உகந்த செவ்வாய்கிழமை தினத்தில் ஆடி மாத தேய்பிறை பிரதோஷம் வந்துள்ளது தனிச்சிறப்பாகும்.

இந்நாளில் பிரதோஷ விரதமிருந்து விளக்கேற்றி வழிபடும்போது முருகனருளால் அனைத்து செல்வவளம் கிடைப்பதுடன், செவ்வாய் பகவானால் ஏற்படும் துன்பங்களும், பாதிப்புகளும் நீங்கும் என்று சிவபுராணம் கூறுகின்றது.

பிரதோஷ கால வழிபாடு என்பது முதலில் நந்திக்கும், அதன் பின்னரே சிவபெருமானுக்கும் நடைபெறுவது வழக்கமாகும்.

பிரதோஷ காலத்தில் சிவபெருமான் நந்தியின் 2 கொம்புகளுக்கிடையில் திருநடனம் புரிவதன் காரணமாக, நந்தியின் 2 கொம்புகளுக்கிடையே சிவ தரிசனம் செய்வதால் அனைத்து பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

தோல்விகளை தவிர்க்கும்

வாழ்வில் தோல்விகளே இல்லாமல் ஒருவரால் வெற்றியடைய முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது.

தோல்விகள் ஏற்பட, ஏற்படத்தான் மனிதனிடம் பக்குவம், பொறுமை, நிதானம் கிடைத்து, லட்சியத்தை அடையவேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும்.

இந்த தோல்விகள் என்பது மனிதர்கள் என்றில்லை, முனிவர்கள், ரிஷிகள், தேவர்கள் மற்றும் அனைத்து உயிர்களிடமும் ஏற்படுவது இயல்பான ஒன்றாகும்.

இதில், தோல்விகளை கண்டால் துவண்டு விடும் மனோபாவம் மனிதனிடம் மட்டுமே உண்டு.

மற்ற பிரிவினர் யாரும் தோல்விகளை இயல்பாக ஏற்றுக்கொண்டு, அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து விடுவர்.

ஆனால், மனிதன் மட்டும் தோல்விகளில் இருந்து பாடம் கற்று கொள்வதற்கு பல தோல்விகளை சந்திக்க வேண்டியுள்ளது.

பிரபஞ்சத்தில் நடைபெறும் செயல்கள் அனைத்திற்கும் காரண காரியமுண்டு.

இறைவனது நாடகத்தில் மனிதர்கள் அனைவருமே கதாபாத்திரங்கள் மட்டுமே.

அதனால், உலகில் நடைபெறும் விஷயங்களின்மீது பற்றின்றி தாமரை இலை தண்ணீர்போல் இருக்க கற்றுக்கொண்டால், எந்த காரியங்களிலும் தோல்வி என்பதே ஏற்படாது.

வெற்றிகரமான வாழ்க்கை

பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்திட, தோல்விகளால் துவண்ட இந்திரன், சந்திரன் போன்றோர்களுக்கு சிவனருளால் நல்வாழ்வு கிடைத்தது போன்று தோல்விகளில் இருந்து மீளும் சக்தி கிடைத்து வெற்றிகரமான வாழ்க்கை கிடைக்கும்.

கிரக தோஷங்களால் ஏற்படும் அனைத்து பாவங்களும் நீங்கி புண்ணியம் கிடைக்கும்.

மேலும், பிரதோஷ பூஜையின்போது, நந்தி தேவருக்கு அருகம்புல் மாலையை அணிவித்து நெய் விளக்கேற்றி வழிபட கோடி நன்மைகள் கிடைக்கும்.

சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்திய தினம் ஒரு தேய்பிறை திரயோதசி திதி என்பதால், இன்று அவசியம் சிவன் கோயிலுக்கு சென்று வழிபடுவது மிகுந்த நன்மையை கொடுக்கும்.

பிரதோஷ பூஜையின்போது, நந்தி தேவருக்கு அருகம்புல் மாலையை அணிவித்து வணங்குவதால் கிடைக்கும் கோடி நன்மைகளை உங்கள் மனம் கவர்ந்தவர்களும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.



Follow Us on