download_indicator

தீப்பொறி பட்டு ஓட்டையான துணியை உடுத்துவது சரியா?

பூஜை நேரத்தில், விளக்கேற்றும் நேரத்தில், கோயில் யாகத்தில் கலந்து கொள்ளும் நேரத்தில், நம்மையே அறியாமல், நமது புடவை வேட்டி போன்றவை தீயில் பட்டு ஒட்டை விழும். விளக்கில், ஊதுவத்தியில், பட்டாசு தீப்பொறியில், நாம் அணிந்திருக்கும் ஆடை பட்டு ஓட்டை விழுந்து விட்டால், அந்த உடையை மீண்டும் அணியலாமா? விலை உயர்ந்ததாக இருக்கிறதே தூக்கி எரிய முடியுமா? என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. அணிவது சரியா? தவறா? அறிவோம் வாருங்கள்.

என்ன செய்யலாம்?

ஓட்டை விழுந்த ஆடைகள் அணிவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

தீப்பொறி பட்டவற்றை, அக்னியின் நாக்குகளுக்கு இரையான பொருளாகக் கருதப்படுகிறது.

அவ்வகையில் தீயில் பட்டு இரையான பொருட்கள் எதுவும் பயன்பாட்டிற்கு உகந்ததல்ல.

பாதியளவு இரையான எந்த பொருளாயினும் அவற்றை நீக்கிவிட்டு புதுப்பிப்பதே நமது மரபு.

விலை உயர்ந்த உடை, பட்டுப்புடவை என்றாலும் பயன்படுத்துவது முற்றிலும் தவறாகும்.

சிறிய ஓட்டை தானே வேலைக் காரர்களுக்கு கொடுக்கலாமா? என்றால், அது மிகப்பெரிய பாவமாகும்.

தீ பட்டு ஓட்டையான உடையை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதும் பாவச்செயல் தான்.

தர்மம் செய்ய விரும்புபவர்கள் புதிய ஆடையை வாங்கி கொடுப்பது தான் முறை.

முக்கிய குறிப்பு

துடைப்பதற்கு பயன்படுத்தினாலும் கூட, தீப்பொறி பட்டு ஓட்டை விழுந்த இடத்தைக் கத்தரித்துவிட்டு மீதம் உள்ள நல்ல துணியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.



Follow Us on