download_indicator

தடையில்லாத பணவரவிற்கு என்ன பரிகாரம்

பொதுவாக ஒரு ஜாதகத்தில் 2-ஆம் வீட்டை வைத்து என்ன பலன் கூறலாம் என்று பார்க்கலாம். 2-ஆம் வீடு என்பது குடும்ப ஸ்தானம், தன ஸ்தானம், வாக்கு ஸ்தானம் எனப்படும். முதலில் 2-ஆம் வீட்டு அதிபதி யார் அவர் எங்கு இருக்கிறார். 2-ஆம் வீட்டில் எந்தெந்த கிரகங்களின் பார்வை இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அப்பொழுது தான் பலன் சரியாக வரும். 2-ஆம் வீடு என்பது ஒருவரது செல்வ செழிப்பைக் குறிக்கும். பொதுவாக ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் வீடு தன ஸ்தானம் ஆகும். 11-ஆம் வீடு லாப ஸ்தானம் ஆகும். 9-ஆம் வீடு பாக்கிய ஸ்தானமாகும். 4-ம் வீடு அசையும், அசையா சொத்து ஸ்தானமாகும். 10-ஆம் வீடு தொழில் ஸ்தானமாகும்.

தன வரவு உண்டாக

பொதுவாக தன ஸ்தானாதிபதி 1, 4, 5-க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும், பாக்கிய ஸ்தானமான 9-ஆம் அதிபதி 1, 2, 4, 5 10, 11-க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும், பரிவர்த்தனைப் பெற்றாலும் 10-ஆம் அதிபதி 1, 2, 4, 5, 11-க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும், 11-ஆம் அதிபதி 1, 2, 4 5-க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும், லக்னாதிபதி 4, 5-க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும், தாராள தன வரவு உண்டாகும். இவை தவிர, 2-ஆம் இடத்தில் இருக்கும் கிரகங்கள் கூட, தன வரவை கொடுக்கும்.

பரிகாரம்

2-ஆம் இடத்தில் கேது இருப்பவர்கள், விநாயகருக்கு சதுர்த்தி விரதம் இருந்து, அருகம் புல் சாற்றி வழிபட முழுமையான பலனை பெறலாம்.



Follow Us on