
தாரா பலன் என்பது நட்சத்திரங்கள் நமக்குத் தரும் பலன்கள் ஆகும். இது நடைமுறை வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். தாராபலன் மூலமாக கன கச்சிதமாக ஒருவருக்கு அன்றைய தினம் என்ன பலன் என்பதை நாம் கணித்து விடலாம். தாராபலன் அட்டவணை நமது ஓம் தமிழ் காலண்டரின் சுபஹோரை, கெளரி பஞ்சாங்கம் பகுதியில் உள்ளது. அதில் உங்களுக்கான பலனை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
இங்கு கவனிக்க வேண்டியவை
தாரைகள் மொத்தம் 9. இதில் தாரா பலன் 2, 4, 6, 8, 9 இந்த எண்கள் வந்தால் அந்த நாள் உங்களுக்கு நன்மையை செய்யும். இப்போது 9 க்கு மேல் நட்சத்திரம் வந்து விட்டால் என்ன செய்வது?
கவலை வேண்டாம். வருகிற நட்சத்திரத்தை 9 ஆல் வகுத்துக் கொள்ளுங்கள். இப்போது கிடைக்கும் மீதம் இந்த 2, 4, 6, 8, 9 என இந்த எண்களாகக் கிடைத்தால் அந்த நாள் உங்களுக்கு அதிசயிக்கத் தக்க நன்மைகளைச் செய்யும். அதை விடுத்து 1, 3, 5, 7 என்று வந்தால் முறையே நஷ்டம், சோதனை, ஏமாற்றம், விரக்தி என்ற விதத்தில் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
பலன்கள்
1. ஜென்ம தாரை - மனம் சஞ்சலம் அடையும், அலைச்சல் இருக்கும், தலைவலி, உடல் சோர்வு வந்து போகும், ஆரோக்கிய குறைபாடு, பொருள் நஷ்டம் ஏற்படும்.
2. சம்பத்து தாரை - அன்றைய தினம் வருமானத்திற்கு வழி பிறக்கும் என்று அர்த்தம்
3. விபத்துத் தாரை - வண்டி வாகனங்களை ஓட்டும் சமயத்தில் கவனமாக ஓட்ட வேண்டும். நிறைய பேருக்கு இந்தக் காலத்தில் தான் விபத்து ஏற்படும்.
4. சேம தாரை - அன்றைய தினம் சௌக்கியமாக இருப்பார்கள் என்று பொருள்.
5. பிரதியக்கிய தாரை - அதிக அளவில் சோதனைகளை சந்திக்க வேண்டி வரும். துர்பலன்கள் அதிகமாக வரும்.
6. சாதக தாரை - அன்றைய தினம் நாம் எடுக்கிற முயற்சி சாதகமாக முடியும் என்று பொருள்.
7. வதை தாரை - விரக்தி எண்ணம் தோன்றும். தவறான எண்ணங்கள் தோன்றும். மரணத்திற்கு நிகரான துன்பங்கள் வரும்.
8. மைத்ர தாரை - அதிக அளவில் நன்மைகளை தரும்.
9. பரம மைத்திர தாரை - மிக அதிக அளவில் நன்மைகளை தரும்.