download_indicator

தனவசியத்தை கொடுக்கும் தேய்பிறை பஞ்சமி

மாதந்தோறும் வருகின்ற பௌர்ணமிக்கு அடுத்த ஐந்தாவது திதி தேய்பிறை பஞ்சமி திதியாகும். இந்நாளில் வராஹியை வழிபட்டு வந்தால் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு கிடைப்பதுடன், எதிரிகளே இல்லாத நிலையும் ஏற்படும். அத்தகைய வராஹி அன்னையை தேய்பிறை பஞ்சமி தினத்தன்று வழிபடுவதால் கிடைக்கும் சிறப்பு குறித்து பார்க்கலாம்.

வழிபாடு

இன்று தை மாத தேய்பிறை பஞ்சமி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விநாயகரை வணங்கிய பின்னர், வராஹி அன்னையை வழிபடுவது சிறந்தது.

விராலி மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடுவதுடன், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எருமைத்தயிர், தேன் கலந்த மாதுளை, அண்ணாசி பழம், செங்கரும்பு, மசால் வடை, செவ்வாழைப்பழம் போன்றவற்றை படைத்து வழிபட, சிறப்பான பலன்களை தரும்.

வராஹி தேவிக்கு செந்நிற மலர்கள் அணிவித்து வழிபட தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தந்தருள்வாள்.

மாலையில் அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று வராஹி தரிசனம் செய்து, வராஹிக்கு வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன் மற்றும் நெய்யுடன் கலந்து படைத்து, தேங்காயில் விளக்கேற்றி வழிபாட்டை நிறைவு செய்யலாம்.

இவ்வாறு தொடர்ந்து 5 தேய்பிறை பஞ்சமிகளில் வராஹியை வழிபாடு செய்து வர தன வசியம் ஏற்படும், தொழில் விருத்தியாகும், வியாபாரம் செழிக்கும்.

வராஹி மந்திரம்

ஓம் ச்யாமளாயை விக்மஹே

ஹல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வராஹி ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறி வழிபடுவோருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும்.

மனதில் தைரியம் பிறக்கும், கேட்ட வரங்கள் கிடைக்கும்.

பலன்கள்

தேய்பிறை பஞ்சமி தினத்தில் இயன்ற அளவு அன்னதானம் செய்வது, பானகம், நீர் மோர் வழங்குவதால் வராஹி தேவி வாழ்வை குளிர்ச்சியாகவும், இனிமையாகவும் ஆக்கிடுவாள்.

எதிர்பாராத ஆபத்துகளும், விபத்துக்களும் விலகி ஓடும், தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

வாக்கு பலிதம் ஏற்படும், நீண்ட நாள் நோய்கள் குணமாகும். செய்வினை கோளாறுகள் நீங்கும்.

திருஷ்டி, தோஷம் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

கடன் தொல்லை நீங்கி வறுமை ஒழியும்.

பஞ்சமியன்று வழிபட வேண்டிய வராஹியின் சிறப்புகளை உங்கள் உறவினர்களும், நண்பர்களும் அறிந்திட செய்யுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on