
இந்து மதத்தில் கூறப்படும் சடங்குகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணகாரியம் இருப்பதோடு, அதன் முக்கியத்துவம், அவசியம் பற்றி பாரம்பரியமாக எடுத்து சொல்லப்பட்டு வருவதாலேயே பல லட்சம் ஆண்டுகளை கடந்தபோதும் இன்றைக்கும் இந்து மதம் உயிர்ப்புடன் உள்ளது. அந்த வகையில் கணவன், மனைவி இருவருக்குமான தாம்பத்திய உறவு கொள்வதற்கு கூட சில வரைமுறைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து அதன் விபரம் என்னவென்று அறிந்திடலாம்.
தாம்பத்திய உறவின் அவசியம்
திருமண வாழ்க்கையில் சலிப்பு ஏற்படாமலும், சந்தோஷமாகவும் இருப்பதற்கு தாம்பத்திய உறவு முக்கிய பங்கு வகிக்கிறது.
கணவன், மனைவிக்கிடையே தாம்பத்திய உறவு, ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி உறவுகளின் பலத்தை அதிகரிக்கிறது.
அத்தகைய நெருக்கமான உறவே ஆயுள் முழுவதும் நீட்டிக்கச் செய்கிறது.
மேலும், குழந்தைப்பேறுக்கு அடிப்படையே தாம்பத்திய உறவுதான் என்பதால், கணவன், மனைவி இருவரும் ஒருமித்த கருத்தோடு தாம்பத்திய உறவு வைத்து கொள்ளும்போது விரைவில் குழந்தை பிறக்கும்.
அதுமட்டுமல்ல, தாம்பத்திய உறவானது மன அழுத்தத்தைக் குறைத்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நேர்மறையான எண்ணங்களையும் ஏற்படுத்தும்.
எனவே, புதிதாக திருமணமான தம்பதியர்கள் மட்டுமன்றி எத்தனை வயதானாலும் கணவன், மனைவிக்குள் புரிதல் இருப்பதற்கு தாம்பத்திய உறவு மிக அவசியமாகும்.
ஆனால், இன்றைக்கு பெரும்பாலான தம்பதியினரிடம் அத்தகைய புரிதல் இல்லாத காரணத்தால், தாம்பத்திய உறவு சீர்குலைகிறது.
அதேபோல், சிறு வயதில் ஏற்படுகிற பாலியல் வன்கொடுமை காரணமாக பாதிக்கப்படுகிற பெண்களும், தாம்பத்திய உறவு கொள்வதை பிரச்சினையாக கருதுகிறார்கள்.
அத்தகைய இடர்பாடுகளை கலைந்து கணவன், மனைவிக்குள் மனம்விட்டு பேசி தாம்பத்திய உறவை வைத்துக்கொள்வது நல்லது.
எது நல்ல நேரம்?
கணவன், மனைவிக்குள் தாம்பத்திய உறவு வைத்து கொள்வது பற்றி சாஸ்திரங்கள் கூறுவதாவது:
மணமாகிய பெண்ணுக்கு மாதவிலக்கு முடிந்து 5-வது நாளன்று தலைக்கு குளித்தபின் அடுத்த 16 நாட்கள்தான் தாம்பத்திய உறவை மேற்கொள்ளும் காலமாகும்.
அந்த 16 நாட்கள் முடிந்த பிறகு, மீண்டும் மாதவிலக்கு வந்து குளிக்கும் வரை தாம்பத்திய உறவு கொள்ளக்கூடாது.
தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளக்கூடிய அந்த 16 நாட்களிலும் கூட உறவு கொள்ளக்கூடாத நாட்களாக அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, கணவன், மனைவியின் ஜன்ம நட்சத்திர தினம், விரத தினம் போன்றவைகள் உள்ளன.
அதுமட்டுமல்ல, உறவு கொள்ளும் நாட்களில் நண்பகல் நேரம் மற்றும் மாலை சந்தியா காலம் போன்ற காலங்களிலும் உறவு கொள்ளக்கூடாது.
இவ்வாறு தவிர்க்க வேண்டிய நாட்கள் மற்றும் நேரங்களில் உறவு கொள்வதன் மூலமாக பிறக்கும் பிள்ளைகள் ஆரோக்கியமின்றியும், அல்பாயுசாகவும் இருப்பார்கள் என்று வேதங்கள் கூறுகின்றன.
கணவன், மனைவி இருவரும் தாம்பத்திய உறவு கொள்ளக் கூடாத நாட்கள் எதுவென்று சாஸ்திரங்கள் கூறுவதை புதிதாக மணமான தம்பதிகள் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.