
பல மொழிகள் கற்றறிந்த பாரதியார், யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடியது உண்மையே என்று பல்வேறு ஐரோப்பிய மொழி அறிஞர்கள் மட்டுமல்ல, உலக நாட்டு அறிஞர்களும் கூறியிருப்பது தனி சிறப்பாகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியில் உள்ள ஐ என்ற எழுத்தின் சிறப்பை அறிந்திடலாம்.
ஐ-யும் கடவுளும்
”ஐ” என்ற ஓரெழுத்து அகரம்-இகரம்-யகரம் என்ற மூன்றையும் சேர்ந்தது.
அதில் அகரம்-கடவுளையும் (பதி)
இகரம்-ஆத்மாவையும் (பசு)
யகரம்-உலகையும் (பாசம்) குறிப்பிடுகிறது.
ஐ என்றால் அழகு என்றும் ஒரு பொருளுண்டு.
அழகாக மழை பெய்கிறது என்பதை ஐது வீழி பெயல் என்று சிறுபாணாற்றுப்படைக் குறிப்பிடுகிறது.
ஐ-ன் சிறப்பு
ஐ என்பது ஒரு நெடில் எழுத்தாகும். 2 மாத்திரை அளவு கொண்ட இந்த எழுத்து, 'ஐகாரம்' என்றும் அழைக்கப்படுகிறது,
ஐகாரம் தனித்து நின்றும், மெய்யெழுத்துகளோடு சேர்ந்தும் சொல்லுக்கு இறுதியில் வருகிறது.
ஆனால், எந்த சொற்களுக்கு இடையிலும் தனியே வருவதில்லை என்பது தனி சிறப்பாகும். பிற மெய்களுடன் கூடியே வருகிறது.
'ஐ' என்ற எழுத்துக்கு 'தலைவன்' என்றும் பொருள் உண்டு.
தமிழில் ஒரு சிலர் ஐ என்று எழுதுவதற்கு பதிலாக அய் என்று எழுதுவதுண்டு, ஆனால், 'அய்' என்ற எழுத்துக்கு எந்தப் பொருளும் கிடையாது.
அதனால், 'ஐ'க்கு பதிலாக 'அய்' என்று எழுதுவது பிழையாகும்.
"அய்' - என்பது எப்பொருளையும் குறிக்காத வெற்று எழுத்து.
பல பொருள்களை குறிக்கும் ஒரு எழுத்துக்கு மாற்றாக, பொருள் குறிக்காத வெற்று எழுத்துகளை எழுதுவது தவறாகும்.
ஐ - க்கு போலியாக அய் எழுதலாம் என்று தொல்காப்பியம் கூறுகிறது என்று போலியாக அய் என்று எழுதுவதை தவிர்க்க வேண்டும், அவ்வாறு எழுதுவதால் மொழிமரபு கெடும்.
திருநாதர் குன்று
செஞ்சியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சிறுகடம்பூர் மலை மீது இருக்கும் திருநாதர் குன்றுதான், தமிழ் மொழியில் உள்ள ஐ என்ற எழுத்தை உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளது.
இந்த குன்று சமணர்களுக்கும், தமிழ் தொல்லியல் நிபுணர்களுக்கும் மிக முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
24 தீர்த்தநாதர்கள் அமர்ந்திருக்கும் திருநாதர் குன்றின் மேலே 12, கீழே 12 என்று இரண்டு வரிசையாக தீர்த்தநாதர்கள் அமைந்துள்ளனர்.
9-ம் நூற்றாண்டில் சோழர்களால் உருவாக்கப்பட்ட இந்த பாறை சிற்பத்தில் இருக்கும் 24 தீர்த்தநாதர்களும் வெவ்வேறு முகபாவனைகளுடன் இருக்கிறார்கள் என்பது சிறப்பு.
இங்கேயிருக்கும் கல்வெட்டில் தமிழ் பிராமி, வட்டெழுத்தாக மாறிய கல்வெட்டுகள் உள்ளன.
அத்துடன், இங்கே 5ம் நூற்றாண்டு கல்வெட்டான பிராமி தமிழ் கல்வெட்டுகள் உள்ளன.
மேலும், உலகிலேயே இங்குதான் ‘ஐ’ என்ற தமிழ் எழுத்து முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதுவரை ஐ என்ற எழுத்திற்கு பதிலாக, ‘அய்’ என்றே எழுதப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தொன்மை வாய்ந்த தமிழ் மொழியில் உள்ள 'ஐ' என்னும் எழுத்தை உலகிற்கு காட்டிய திருநாதர் குன்றை வாழ்வில் ஒருமுறையாவது சென்று காண்பது அவசியமாகும்.
தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்கும் ஐ என்ற எழுத்தின் மகத்துவத்தை உங்கள் பிள்ளைகள் எல்லோரும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.