
எமொஜி என்பது மகிழ்ச்சி, புன்னகை, சிரிப்பு போன்ற பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு சின்னமாகும். அதில் சிரிக்கும் எமொஜி வடிவத்தை கண்டாலே மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி ஒருவிதமான மகிழ்ச்சி ஏற்படும். இந்த வடிவம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருப்பதால், பெரியவர்கள் மனதையும் குழந்தைபோல் ஆக்கிவிடுவது உண்மையாகும். அத்தகைய சிரிக்கும் எமொஜி வடிவத்தை ஏப்ரல் 25-ஆம் தேதி ஆகாயத்தில் காணலாம்.
டிஜிட்டல் படம்
தனிநபர் ஒருவரின் கருத்து, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் டிஜிட்டல் படம் அல்லது ஐகானே எமொஜியாகும்.
தற்போது அனைத்து தகவல் தொடர்பு பரிமாற்றங்களும் இணையதளம் வாயிலாகவே நடைபெறுவதால், கருத்துகளையும், உணர்ச்சிகளையும் அடுத்தவர்களிடம் பரிமாறி கொள்வதற்கு இந்த எமொஜிகள் உதவுகின்றன.
இந்நிலையில், உலக எமோஜி தினம் ஆண்டுதோறும் ஜூலை 17-ஆம் தேதி 2014 முதல் கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
வானில் அதிசயம்
வானில் எத்தனையோ அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கையில், ஏப்ரல் 25-ஆம் தேதி அதிகாலையில் ஒரு அதியச நிகழ்வு நடைபெற உள்ளது.
வெள்ளி, சனி ஆகிய 2 கோள்களும் அருகருகே சாதாரணமாக கண்களால் காணும் வகையில் தெரியவுள்ளது.
அப்போது அவை இரண்டுக்கும் நடுவில் பிறை சந்திரன் வரும்போது அது சிரிக்கும் எமொஜி போல் தெரியும்.
வானில் நடைபெறவுள்ள இந்த அதிசயம் ஏப்ரல் 25-ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 5:00 மணி முதல் 5:30 மணி வரை தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, வானில் தோன்றும் இந்த அதிசய நிகழ்வை உங்கள் வீட்டின் மாடியில் நின்று குழந்தைகளுடன் சேர்ந்து கண்டுகளித்து மகிழ்ச்சி அடையுங்கள்.