download_indicator

சிவராத்திரியின் மகத்துவம்!

சிவபெருமானுக்கு உகந்த சிவராத்திரி தினத்தில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட, நாம் வேண்டுவது அனைத்தும் கிடைக்கும். மாதந்தோறும் வருகின்ற சிவராத்திரியில், மாசி மாதம் வருகின்ற சிவராத்திரி தினமே மகா சிவராத்திரி தினமாக கொண்டாடப்படுவதையடுத்து, சிவராத்திரி வழிபாடு குறித்தும், அதன் மூலமாக கிடைக்கும் நன்மைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

சிவராத்திரி என்றால் என்ன?

ஒவ்வொரு மாதமும் வருகின்ற தேய்பிறை சதுர்த்தசி தினத்தின் இரவே மாத சிவராத்திரி எனப்படும். அதன்படி மாதந்தோறும் வருகின்ற சிவராத்திரி தினத்தில் சிவபெருமானுக்கு விரதம் இருப்பது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

அதையடுத்து, இன்று பங்குனி மாத சிவராத்திரி தினத்தில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்வதால் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும்.

முன்னொரு சமயம் பிரளய காலத்தின் போது பிரம்மன் உள்பட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டது.

அதனால், மனவருத்தமடைந்த அன்னை உமாதேவி, சிவபெருமானை நினைத்து இரவு முழுவதும் பூஜை செய்தாள்.

ஆகம விதிப்படி இரவு நான்கு ஜாமம் முழுவதும் பூஜை முடிந்ததும் சிவபெருமானை வணங்கிய அன்னை, தான் வழிபட்ட இரவை தேவர்களும், மனிதர்களும் சிவராத்திரி என்ற பெயரில் கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

மேலும், சிவராத்திரி தினத்தன்று மாலையில் சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, சிவபெருமானை வணங்கியவர்களுக்கு அனைத்து நலன்களையும் வழங்கி இறுதியில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள்.

சிவபெருமானும், அவ்வாறே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார்.

வழிபாடு

இன்று சிவராத்திரி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

அதன் பின்னர், அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று, நந்தி தேவரையும், சிவபெருமானையும் வணங்கி அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பது மிகச் சிறந்தது.

சிவராத்திரி நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள், தண்ணீர், பால், பழங்களை சாப்பிடலாம்.

பூஜை செய்ய முடியாதவர்கள் நாள் முழுவதும் சிவபுராணம், சிவகீதை, பெரிய புராணம், தேவார திருவாசக பாடல்கள் போன்றவற்றை படிப்பது மிகவும் நல்லது.

தொடர்ச்சியாக 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், சிவகதி அடைவார்கள் என்பது ஐதீகம். அத்துடன் அவர்களின் 21 தலைமுறைகளுக்கும் முக்தி கிடைக்கும்.

மகத்துவம்

வீட்டில் சிவராத்திரி பூஜை செய்யும்போது, சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சம்பு, சூலினா, உக்ரா, பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை கூறி இறைவனை பூக்களால் அர்ச்சித்து அதன் மகத்துவத்தை யாராலும் கூறமுடியாது.

கோயிலுக்குச் செல்பவர்கள், சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். பூஜை முடிந்த பிறகு, இறைவனுக்கு படைத்த நைவேத்தியங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

சிவராத்திரி தினத்தன்றுதான் முருகப்பெருமான், குபேரன், இந்திரன் போன்ற பலர் விரதமிருந்து எண்ணற்ற சக்திகளை பெற்றதால், இன்று சிவபெருமானை வணங்கிட எண்ணற்ற பலன்களை பெற்றிடலாம்.

சிவராத்திரியன்று சிவபெருமானை விரதம் இருந்து வழிபடுவோருக்கு சிவனருள் மட்டுமின்றி, ஒரு அரசனுக்கு இணையான ராஜபோக வாழ்க்கை கிடைக்கும்.

சிவராத்திரி தினத்தன்று விரதம் இருந்து சிவபெருமானை வணங்குவதுடன், சிவபெருமானுக்கு விருப்பமான ருத்ராட்சம், சிவபுராணம் நூல், விபூதி போன்றவற்றை சிவபக்தர்களுக்கு வாங்கி கொடுப்பது மகத்தான புண்ணியங்களை கொடுக்கும்.

சிவராத்திரி தினத்தன்றுதான் பார்வதி தேவி, முருகப்பெருமான், குபேரன், இந்திரன் போன்றோர் விரதமிருந்து எண்ணற்ற பலன்களை பெற்றனர் என்பதை உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.



Follow Us on