சிவபெருமானுக்குரிய ஊமத்தம் பூவின் மகத்துவம்
கடவுளை வணங்க செல்லும்போது ஏதாவது பூக்கள் அல்லது பூமாலை வாங்கி சென்றால் நல்லது என்று கூறுவதுண்டு. அதற்காக, கண்டிப்பாக பூ வாங்கி சென்று தான் தெய்வத்தை வணங்க வேண்டும் என்று எந்த தெய்வமும் கூறவில்லை. இந்நிலையில், ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உரிய பூக்கள் என்றிருப்பதில், சிவபெருமானுக்குரிய ஊமத்தம் பூவைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
தீய சக்தியை அகற்றும்
தெய்வ சக்தி நிறைந்த செடியாகக் கருதப்படும் ஊமத்தஞ்செடியின் காய், பூ, இலைகள் என அனைத்தும் தீய சக்திகளை விரட்டுவதற்கான சிறந்த பரிகாரமாக உள்ளது. ஊமத்தம் காய்க்கு கெடுதலை அகற்றக்கூடிய சக்தி உண்டு.
எனவேதான், வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை அகற்றுவதற்கு ஊமத்தங்காய் தீபம் சிறந்த பரிகாரமாகிறது.
ஊமத்தஞ்செடியில் நீல ஊமத்தை, கரு ஊமத்தை என்று 2 ரகங்கள் உள்ளன.
இந்த ஊமத்தஞ்செடிக்கு, உம்மத்தை, ஊமத்தான், வெள்ளுமத்தை, காட்டு ஊமத்தை ஆகிய பெயர்களும் உண்டு.
சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான பூவாக இந்த ஊமத்தம் பூ இருப்பதால், இறைவனின் பூஜையில் இந்த பூ அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு லட்சம் பசு
விநாயகருக்கு அருகம் புல் அணிவிப்பது போல், சிவபெருமானுக்கு, யாரும் அதிகம் விரும்பாத ஊமத்தம் பூ அணிவிக்கப்படுகிறது.
தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் வளரக்கூடிய இந்த ஊமத்தம் பூவை பறித்து சிவபெருமானுக்கு சாற்றலாம்.
இறைவன் படைப்பில் எதுவும் தாழ்ந்தது அல்ல என்ற உதாரணத்திற்கு, ஊமத்தம் பூவே சிறந்த சாட்சியாகும்.
சிவலிங்கத்திற்கு ஒரு ஊமத்தம் பூவை சாற்றி வழிபட, ஒரு லட்சம் பசுக்களை தானம் கொடுத்த புண்ணியம் கிடைக்கும் என்று சிவ ஆகமங்கள் கூறுகின்றன.
ஊமத்தம் பூவை அணிவதன் காரணமாக, சிவபெருமானுக்கு உன்மத்த சேகரன் என்ற பெயரும் ஏற்பட்டது.
இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதால், இதன் செடி, பூ மற்றும் அனைத்து பாகங்களுமே மருந்தாக பயன்படுகிறது.
ஆக்ஸிஜனேற்ற பண்புகளை ஊமத்தம் பூ கொண்டிருப்பதன் காரணமாக, ஆயுர்வேத சிகிச்சையில் இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
முடி உதிர்தல், பொடுகு, ஆஸ்துமா, சுவாசம், நுரையீரல் மற்றும் மார்பில் சளி சேர்தல் போன்ற நோய்கள், ஆண்மைக்குறைவு மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
ஊமத்தை இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, இளஞ்சூட்டில் காதில் விட காது வலி தீரும்.
ஊமத்தை இலையை நல்லெண்ணெய்யில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெரிக்கட்டுதல் ஆகியவை குணமடையும்.
தெய்வ சக்தி நிறைந்த செடியாகக் கருதப்படும் ஊமத்தஞ்செடியை பற்றி உங்களுக்கு தெரிந்தவர்கள் அறிந்திட பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).