download_indicator

சிவபெருமானை காளிதேவி தன் காலால் மிதித்தது ஏன்?

புராணங்களில் அசுரர்கள் பலர், தேவர்களையும், நவக்கிரகங்களையும் காலால் மிதித்து அட்டூழியம் செய்ததாக பலரும் படித்திருக்கலாம். அதுபோன்று, காளி தேவி எதற்காக சிவபெருமானை காலால் மிதித்தாள் என்றும், அந்த சம்பவம் குறித்தும் அறிந்திடலாம்.

அதர்மத்தை அழிப்பவள்

எப்போதெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடுகிறதோ, அங்கே அக்கிரமம் செய்பவர்களுக்கும், நாசவேலை செய்பவர்களுக்கும் அழிவை ஏற்படுத்துபவளாக காளி தேவி திகழ்கின்றாள்.

காளி தேவி பார்ப்பதற்கு பயங்கர தோற்றத்துடன் காணப்பட்டாலும், ஒரு தாயைப்போன்ற பரிவு, பாசமுடன் அருள்பாலிக்கிறாள்.

காளி தேவி எப்போதும் சுறுசுறுப்பானவள், தாமதத்தை விரும்பாதவள்.

பிடாரி, பத்ரகாளி, அங்காளி என்றும் அழைக்கப்படுகின்ற காளி தேவியை உபாசனை செய்தவர்களில் ராமகிருஷ்ண பரமஹம்சரும், காளிதாசரும் முக்கியமானவர்களாவர்.

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி, காளி தேவியை வணங்கித்தான் போருக்கு சென்று வெற்றியோடு திரும்புவாராம்.

என்ன சம்பவம்?

ரக்தபீஜா என்னும் அசுரன் ஒருவன் பிரம்மாவை நோக்கி கடும் தவம் செய்து தனது உடலில் இருந்து ஒரு துளி இரத்தம் சிந்தினால், அதிலிருந்து தன்னைப்போன்றே ஆயிரக்கணக்கானோர் தோன்ற வேண்டும் என்ற வரத்தை பெற்றான்.

அதையடுத்து, தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற ஆணவம் கொண்டு தேவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தினான்.

அதனால் அசுரன் ரக்தபீஜாவை, வதம் செய்வதற்காக துர்கா தேவி, தனது வாளை வீசியதால் அவனுடைய ஒரு துளி இரத்தம் தரையில் விழுந்ததும், அவனிடமிருந்து ஆயிரம் வடிவங்கள் தோன்றின.

அதனால் கோபமடைந்த துர்கா தேவி மஹாகாளியாக அவதாரம் எடுத்து, அனைத்து அசுரர்களையும் கொன்று அவர்களின் இரத்தம் தரையில் சிந்தாதவாறு அனைத்தையும் குடித்தாள்.

சிவபெருமான்மீது

அசுரனின் இரத்தத்தை குடித்த காளி தேவி மிகவும் உக்கிரமாகி ஆவேசமாக நடனமாடினாள்.

அவள் கால் வைக்கும் இடமெல்லாம் அழியத்தொடங்கியதால், உலகத்தை காக்கும் விதமாக, சிவபெருமான் காளி தேவி வரும் பாதையில் படுத்து விடுகிறார்.

காளி தேவியின் பாதம் சிவபெருமான்மீது பட்டதும் காளியின் ஆக்ரோஷம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பினாள்.

தன்னுடைய காலுக்குக் கீழே இருப்பது சிவபெருமான் என்று தெரிந்ததும், மிக வருத்தமடைந்த காளி தேவி, சிவபெருமான் மீதிருந்த பாதத்தை எடுத்தாள்.

இவ்வாறாக காளி தேவியின் கோபத்தை தணிப்பதற்காகவே, சிவபெருமான் காளியின் காலடியில் வந்து படுத்ததாக ஐதீகம்.

காளி தேவிக்கு வந்த ஆணவத்தை அடக்குவதற்காக, சிவபெருமான் என்ன செய்தார் என்பதை சுமங்கலி பெண்கள் அனைவரும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்



Follow Us on