download_indicator

செவ்வாய்க் கிழமையில் ஏன் முடி வெட்டக்கூடாது?

நவக்கிரகங்களுக்குள் மிகச்சிறந்த செவ்வாய் கிரகத்திற்கு மங்கள காரகன் என்ற சிறப்பு பெயரும் உண்டு. செவ்வாய் என்றாலே மங்கலமான நாள் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையில் தான் அங்காரக விரதம் பின்பற்றப்படுகிறது. மேலும், செவ்வாய்க்கிழமையன்று மௌன விரதம் அனுஷ்டித்தால் யாகம் செய்த பலனை அடைய முடியும் என்று சொல்லப்படுகிறது. அதையடுத்து, மங்கலகரமான பொருட்கள் வாங்குவதற்கும், சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் செவ்வாய்க்கிழமை ஏற்ற தினமாகும். இந்நிலையில் செவ்வாய்க் கிழமைகளில் முடிவெட்டுவது, ஷேவிங் செய்வது, நகம் வெட்டுவது போன்றவை செய்யக்கூடாது என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே, செவ்வாய் கிழமையில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்றும் பார்க்கலாம்.

என்ன செய்யலாம்

கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை வரும் செவ்வாய் ஓரையில் சிறிது சிறிதாக கடனை திருப்பிக் கொடுத்து வர கடன் விரைவில் அடைந்து அந்தப் பிரச்சனையில் இருந்து விரைவாக வெளிவர முடியும்.

ஏதேனும் நோயினால் அவதிப்படுபவர்கள் செவ்வாய்க்கிழமை வரும் செவ்வாய் ஓரையில் வைத்தியம் மேற்கொண்டால் விரைவிலேயே நோயிலிருந்து விடுபடுவார்கள்.

சிலர், செவ்வாய்க்கிழமை மட்டுமன்றி பிற நாட்களில் வரும் செவ்வாய் ஓரையிலும் இத்தகைய செயல்களை செய்வதுண்டு.

என்ன செய்யக்கூடாது

செவ்வாய்க் கிழமைகளில் முடிவெட்டுவது, ஷேவிங் செய்வது, நகம் வெட்டுவது போன்றவற்றை செய்தால் நல்ல அதிர்ஷ்டங்கள் நம்மை விட்டு சென்றுவிடும் என சிலர் கூறுகின்றனர்.

பல மாநிலங்களில், செவ்வாய்க்கிழமைகளில் கடன் கொடுப்பதோ அல்லது கடன் வாங்குவதோ இல்லை.

செவ்வாய்க்கிழமைகளில் நமது பணத்தை பிறருக்கு கடன் கொடுக்கும்போது, நம்மிடம் இருந்து லட்சுமி தேவி சென்று விடுவதாக கருதுகின்றனர்.

செவ்வாய்க்கிழமை என்பது செலவுக்கான நாள் அல்ல, வருமானத்திற்கான நாள் என்று மக்கள் கருதுகின்றனர்.

இந்நாளில் பணத்தையும், பொருளையும் பிறருக்கு கொடுப்பது நமது வீட்டில் வறுமையை வரவழைக்கும் என்று நினைக்கின்றனர்.

எனவே, இந்த நாளில் எந்த பொருளையும் யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்று வட மாநில மக்கள் விரும்புகிறார்கள்.

துரதிர்ஷ்டம்

செவ்வாய்க் கிழமைகளில் பொதுவாக பெண்கள் வீட்டை சுத்தம் செய்வது இல்லை.

அதே போல் தான், சிகை அலங்காரம், சவரம் மற்றும் நகங்களை செவ்வாய்க் கிழமைகளில் சுத்தம் செய்வதில்லை.

முடி வெட்டுவது மற்றும் நகங்களை வெட்டுதல் போன்ற காரியங்களை செவ்வாய்க்கிழமைகளில் செய்யும் போது வீட்டிற்கு துரதிர்ஷ்டம் ஏற்படும் என்று நம்புகின்றனர்.

செவ்வாய்க் கிழமைகளில் குவிந்த குப்பைகளை வீசியெறிதல், கூளங்களை சுத்தம் செய்தல் போன்ற சுத்தப்படுத்தும் பணிகளை கூட செய்வதில்லை.

ஜோதிட சாஸ்திரப்படி, செவ்வாய்க்கிழமைகளில் முடி வெட்டுதல் மற்றும் ஷேவிங் செய்தல் போன்ற செயல்களை பின்பற்றினால் அவரது ஆயுட்காலத்தில் குறைவு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

மற்றொரு காரணமாக, செவ்வாய் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

மற்றொரு காரணமாக, செவ்வாய் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

செவ்வாய்க் கிழமைகளில் முடி வெட்டினால், அது நமது விதியை ஆள்வதற்கு, சனி பகவானுக்கு சக்தியை கொடுக்கும்.

இதனால் செவ்வாயின் எதிர்மறை விளைவுகள் நம் மீது ஏற்பட்டு, பல பாதிப்புகளை சந்திக்க நேரிடலாம்.

செவ்வாய்க் கிழமைகளில் முடி, நகம் வெட்டலாமா, கூடாதா என்றால், அவரவர் மன நிலையை பொறுத்தது. அவரவருக்கு எது சரியாக படுகிறதோ அதன் படி செயல்படலாம்.



Follow Us on