செப்பேடுகள் எதனால் முக்கியத்துவம் வாய்ந்தது?

சங்க காலத்தில் இருந்தே செப்பேடுகள் என்ற வார்த்தையை தொலைக்காட்சி, செய்திதாள்கள், புத்தகங்கள் என நிறைய இடங்களில் கேள்விப்பட்டிருப்போம். அந்த கால முனிவர்கள் முதல் ராஜாக்கள் வரை அனைவரும் முக்கியமான குறிப்புகளை இந்த செப்பேடுகளில் குறிப்பிட்டுள்ளனர். அதனையடுத்து, செப்பேடுகள் என்றால் என்ன என்பதையும், அதன் முக்கியத்துவம் என்ன என்பது பற்றியும் அறியலாமா?

அக்கால செப்பேடுகள்

ஆரம்ப காலக் கட்டங்களில் ஓலைச் சுவடிகளை போன்று நீள வாக்கில் எழுதப்பட்ட, ஒன்றிற்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட ஒரு அமைப்பாக செப்பேடுகள் இருந்தது. செப்பேடுகளின் துளையில் போடப்படும் கம்பிகளின் இணைப்பை முத்திரை கொண்டு இணைத்திருப்பர். மேலும், அந்த முத்திரையானது செப்பேடுகளில் எழுதப்பட்ட ஆவணத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கு உதவியாக இருந்தது.

பிற்காலத்தில் பல தகடுகள் அல்லாமல் ஒரு தகட்டில் மட்டும் எழுதும் முறை பயன்பாட்டிற்கு வந்தது. பல்லவர் காலத்தில் செப்பேடுகளை தமிழ் மற்றும் சமஸ்கிருதம் என இரு வகைகளாக பிரித்தனர். தமிழ் செப்பேடுகள் தமிழ் எழுத்திலும், சமஸ்கிருதம் கிரந்த எழுத்திலும் எழுதப்பட்டது. இருப்பினும்,அதே காலத்தை சேர்ந்த பாண்டிய மன்னர்கள் தமிழ் செப்பேடுகளை வட்டெழுத்தில் குறிப்பிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியத்துவம்

நம்முடைய வரலாற்று உண்மைகளை பாதுகாக்கும் கருவிகளில் செப்பேடானது ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறது.

செப்பேடுகள் என்பது அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட உலோகத் தகடாகும்.

இது பண்டைய காலக் கட்டங்களில் மன்னர்களின் பரம்பரை, கோயில்களின் தான தர்மங்கள் பற்றிய விபரங்கள், போர் குறிப்புகள், போர் தந்திரங்கள் மற்றும் மருத்துவக் குறிப்புகள் போன்ற முக்கியமான தகவல்களை குறித்து வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.

மேலும், ஓலைச்சுவடிகளை காட்டிலும் செப்புத் தகடானது வலிமையானதும், அழியாததாகவும் விளங்குகிறது. இதனாலேயே அக்கால நிகழ்வுகளை எழுதுவதற்கு நம் முன்னோர்கள் செப்பேடுகளை பயன்படுத்தினர்.



Follow Us on