
பொதுவாக செவ்வாய் நீச்சம் அல்லது வக்கிரம் அடைந்தால் அவர்களின் புகழை மங்க செய்துவிடும். அவர்களுக்கு சமூகத்தில் மரியாதையே இருக்காது. தொடர் தோல்விகளை சந்திப்பார்கள். அதையடுத்து ஜாதகப்படி யார், யாருக்கு செவ்வாயால் பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம்.
மேஷம், விருச்சிகம் போன்ற லக்கினத்தில் பிறந்தவர்கள் பெரும் பாதிப்பை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக இந்த இரண்டு லக்கினக்காரர்களுக்கும் செவ்வாயே லக்கினாதிபதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷபம், மிதுனம், கன்னி போன்ற லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் வக்கிரம் அல்லது நீச்சம் பெற்று இருப்பின் பெரும்பாலும் அந்த அமைப்பு நல்ல பலன்களை தரும்.
கடகம், சிம்மம் போன்ற லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் வக்கிரம் அல்லது நீச்சம் அடைந்தால், அதிர்ஷ்டம் என்பதே இவர்களுக்கு இருக்காது. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் போராட வேண்டி இருக்கும்.
துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் வக்கிரம் அல்லது நீச்சம் அடைந்தால் நன்மை, தீமை என இரண்டையுமே செய்யும். பணம் வந்த வேகத்தில் செலவாகும். திருமண வாழ்க்கையில் திருப்தி இல்லாமல் போனாலும் வாழ்க்கை துணையால் லாபமும் உண்டு. ஞாபக மறதி, கவனக்குறைவு போன்றவை ஏற்படலாம். பங்கு சந்தை ஆரம்பத்தில் லாபம் தந்தாலும் பின்னர் பெரிய நஷ்டத்தை தந்து விடும்.
லக்கினாதிபதியாக
இதேபோல், செவ்வாய் லக்கினாதிபதியாக இருந்து நீச்சம் அல்லது வக்கிரம் பெற்றால் புகழ் பாதிக்கப்படும். அலைச்சல் அதிகம் இருக்கும். எல்லா சுப காரியங்களும் தாமதப்படும்.
2-ஆம் இடத்தில் இருந்தால் பணவரவு பாதிக்கப்படும். குடும்பத்தில் சலனங்கள் அதிகம் இருக்கும். வாக்கை காப்பாற்ற இயலாமல் போகலாம்.
3-ஆம் இடத்தில் இருந்தால் சகோதர உறவுகள் பாதிக்கப்படும். மனதில் ஒரு வித பயம் இருந்து கொண்டே இருக்கும்.
4-ஆம் இடத்தில் இருந்தால் நேரத்திற்கு உண்டு, உறங்க முடியாத நிலை இருக்கும். வீடு, நிலம், சொத்துக்கள் வாங்கும் பாக்கியம் தாமதப்படும்.
5-ஆம் இடத்தில் இருந்தால் கல்வி தடைபடும். வெளிநாடு வேலை, குழந்தை பிறப்பு கூட தாமதம் ஆகும்.
6-ஆம் இடத்தில் இருந்தால் அது விபரீத ராஜயோகத்தை தரும். அந்த ஜாதகர் திடீர் என்று நல்ல நிலைக்கு வந்து விடுவார்.
7-ஆம் இடத்தில் இருந்தால் திருமண வாழ்க்கை அதிக சலனங்களை தரும்.
8-ஆம் இடத்தில் இருந்தால் பெரும்பாலும் நன்மையை தான் செய்வார்.
9-ஆம் இடத்தில் இருந்தால் தந்தை வழியில் ஏதேனும் தொல்லையை தரும் அல்லது தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் கூட ஏற்படலாம்.
10-ஆம் இடத்தில் இருந்தால் தொழில் ரீதியாக நிலை இல்லாத தன்மையை தந்துவிடும்.
11-ஆம் இடத்தில் இருந்தால் பங்கு சந்தைகளில் அதிக இழப்பீடுகள் ஏற்படலாம். மூத்த சகோதர உறவுகளுக்கு நன்மையை செய்யாது.
12-ஆம் இடத்தில் இருந்தால் திடீர் தன வரவு ஏற்பட்டு, பொருளாதார நிலை உயரும்.
பரிகாரம்
பொதுவாக செவ்வாய் வக்கிரம் அல்லது நீச்சம் அடைந்தால் செய்ய வேண்டிய பரிகாரமாக, செவ்வாய்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் படித்து சிவப்பு மலர் கொண்டு முருகப்பெருமானை நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வந்தாலே போதும். நல்ல பலன்களைப் பெறலாம். தினமும் கோளறு பதிகம் படிப்பதும் நல்லது.
உங்கள் ஜாதகப்படி செவ்வாய் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதையும், செய்ய வேண்டிய பரிகாரம் குறித்தும் அறிந்திட வாழ்க்கை ஜாதகம் வாங்கிட இங்கே அழுத்தவும்.