சீதையின் பரிசுத்தமும், மக்களின் பரிசுத்தமும்

உறவினர்கள், நண்பர்களிடையே பேசும்போது சிலர் சாதாரணமாக பொய் பேசினால், சூடம் மீது சத்தியம் செய்வாயா என்று கூறுவதை பார்த்திருப்போம். அதுபோன்றுதான், உலகத்தின் பார்வைக்கு சீதை பரிசுத்தமானவள் என்பதை நிரூபிக்கவே இராமபிரான் முயன்றார். அதையடுத்து, சீதை சுயபரிசோதனை செய்த இடத்தில் இன்று மக்கள் எல்லோரும் புனிதமடைகின்றனர். அதையடுத்து அதன் விபரம் குறித்து அறிந்திடுவோம்.

மனித குணம்

இராமபிரானின் மனைவி சீதையை இராவணன் கடத்தி சென்று இலங்கையில் சிறை வைத்தான்.

விருப்பமில்லாத பெண்ணை பலவந்தமாக அடைய முன்றால், இராவணன் தலை வெடித்து இறப்பான் என்ற வரம் காரணமாகவே, சீதையை கடத்தி சென்றும் இராவணனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

ஆனால், இதை உலகம் ஏற்றுக்கொள்ளாதே, நரம்பில்லாத நாக்கு என்ன வேண்டுமானாலும் பேசுமே.

ஒருவரின் மனைவி மற்றொருவரின் இருப்பிடத்தில் ஒரு சில ஆண்டுகள் இருந்து திரும்பி வரும்போது, அவள் தூய்மையானவள்தான் என்று கூறுவதை உலகம் எந்தளவு ஏற்றுக்கொள்ளும்.

அதனால்தான், சீதையின் பரிசுத்தத்தை நிரூபிக்க வேண்டி, சாதாரண மனித வடிவில் அவதாரம் எடுத்தவந்த தெய்வம் கூட, சாதாரண மனிதனை போன்றே நடந்து கொண்டது.

சீதையின் பரிசுத்தம்

கணவன், மனைவிக்குள் அன்பாக இருப்பவர்கள் தங்களுக்குள் எந்த பேதமும் இல்லாமல், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து கோபதாபமின்றி ஆதரவாக இருப்பார்கள்.

அதுபோன்றே சீதையும், இராமரும் ஒருவருக்கொருவர் அன்பாகவும், ஆதரவாகவும் இருந்தனர்.

இலங்கையில் இருந்து கடல் தாண்டி சீதையை மீட்டு வந்த இராமர், இராமேஸ்வரத்திற்கு வந்தார்.

அங்கு வந்ததும் இராவணனை கொன்ற தோஷம் நீங்குவதற்காக, சிவலிங்கத்தை நிறுவி பூஜை செய்தார்.

அதையடுத்து, சீதையின் கற்பை நிரூபிக்க தீக்குளிக்கும்படி இராமன் கூறியதும், எந்த மறுப்பும் தெரிவிக்காத சீதை, லட்சுமணனை அழைத்து அக்னி மூட்ட சொன்னாள்.

அதைக்கேட்டு தயங்கிய லட்சுமணனிடம், உன் தாய் ஸ்தானத்தில் இருந்து உத்தரவிடுகிறேன், தீயை மூட்டு என்றதும், லட்சுமணன் வேறு வழியின்றி கட்டைகளை எடுத்து வந்து தீ மூட்டினான்.

கொழுந்துவிட்டு எரிகிற அக்னிக்குள் சீதை இறங்கும்போது, நான் கற்புடையவள் என்பதை அக்னியே உலகிற்கு நிரூபித்துக் காட்டு என்று கூறினாள்.

அதைக்கேட்டு சந்தோஷமடைந்த அக்னி பகவான், மகாலட்சுமியின் அவதாரமான சீதையின் ஸ்பரிசம் தனக்கு கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சியில், அவனது இயற்கை குணமான வெப்பம் மாறி குளிர்ந்து விட்டது.

மக்களும்

மேலும், அக்னி பகவானே மனிதவடிவெடுத்து தீக்குள் இருந்து, சீதையை கைகளில் தூக்கி வந்து இராமனிடம் கொடுத்தான்.

தர்மபத்தினியாக இருக்கும் சீதையை என்னால் எரிக்க முடியாது என்று கூறி சென்றான்.

இராமேஸ்வரம் கடற்கரையில் இந்த சம்பவம் நடைபெற்றதால், அக்னி பகவானின் பெயரே அந்த கடலுக்கும் அமைந்து விட்டது.

அதனால்தான், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் முன்புள்ள கடலை அக்னி தீர்த்தம் என்று கூறுகின்றனர்.

ஒரு சிலர் சீதையின் வெப்பம் தாங்காமல், அக்னி பகவானே இந்த கடலில் குளித்ததால் அக்னி தீர்த்தம் என்று பெயர் வந்ததாகவும் கூறுவதுண்டு.

அதையடுத்து, சீதை அக்னியில் மூழ்கி தன்னைச் சுத்தமானவளாகக் காட்டியதுபோல், இங்கு வரும் பக்தர்களும் அக்னி தீர்த்தக் கடலில் மூழ்கி, தங்களைப்பிடித்த பாவம் நீங்க பெறுகிறார்கள்.

பரிசுத்தமானவள் என்பதை நிரூபிக்க சீதை தீக்குளித்தபோது, தர்மபத்தினியான இவளை என்னால் எரிக்க முடியாது என்று, அக்னி பகவான் கூறிய சம்பவம் எங்கே நடந்தது என்பதை எல்லோரும் அறிந்திட செய்யுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on