2025-ல் உங்கள் வாழ்வை உயரச் செய்யும் முருக வழிபாடு
புத்தாண்டு 2025, செவ்வாயின் ஆதிக்கத்தோடு கூட்டுத்தொகை ஒன்பதாம் எண்ணில் அமைகிறது!
இது முருகப்பெருமானுக்குரிய மிகவும் சக்தி வாய்ந்த எண்ணாகும்.
நவகிரகங்களையும் படைத்த இறைவனின் நியதிப்படி நமக்கு ஒரு விஷயம் வேண்டுதலாக நிறைவேற வேண்டுமென்றால்
108 முறை மந்திரம் சொல்கிறோம்
108 தேங்காய்கள் உடைக்கிறோம்
108 மணிகள் கொண்ட மாலைகள் உபயோகப்படுத்துகிறோம்
1+0+8 = 9
2025 = 2+0+2+5 = 9
செவ்வாயின் மங்களத்தன்மையோடு பிறந்த இந்த புத்தாண்டில் ஒன்று முதல் 31 தேதிகளில் பிறந்த உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உங்கள் சிரமங்களை குறைத்து, உயர்வைத் தர இறைவன் உங்களை வழிநடத்த உள்ளார்.
இதை 2025 ஆம் காலகட்டத்தில் ஓராண்டிற்குள் கிட்டத்தட்ட நான்கு கிரகங்கள் மூன்று மாபெரும் கிரக பெயற்சிகளால் மாறுகிறது.
சனிப் பெயர்ச்சி மார்ச் 2025-யில்+ராகு கேது பெயர்ச்சி ஏப்ரல் 2025 இல்+குரு பெயர்ச்சி மே 2025 இல் என அடுத்தடுத்து கிரகங்கள் மாற்றம் அடையும்போது அவை உங்களுக்கு மகிழ்ச்சியும் பரிசளிக்கும் பலருக்கு இன்னல்களையும் தந்து விடலாம்.
ஆனால் யாருக்கெல்லாம் உங்களுடைய குலதெய்வத்தினுடைய அருளும் குல குருவினுடைய நல்லாசிகளும் உள்ளதோ அவர்களுக்கு எண் கணித ரீதியாக பெயர் அமைந்து அனைத்து சிரமங்களும் குறைந்து ஒரு வெற்றிகரமான வாழ்க்கை வாழ இறைவன் வழி வகுத்துள்ளார்.
சக்தி வாய்ந்த எண்கள்
ஆம் ஒன்பதாம் எண் மிகவும் சக்தி வாய்ந்த அனைத்து உயிர்களையும் காப்பாற்றக்கூடிய தன்மை உடையது. இந்த காலகட்டத்தில் மிகவும் சிரத்தையோடு முருகப்பெருமானை வழிபடுவோருக்கு அவர் பல ரூபங்களில் வழிகாட்ட இருக்கிறார்.
ஏகன், அனேகன், ஆறுமுகன், ஏழுமலையான் என இறைவனையே எண்களின் மூலம் அழைப்பதில் இருந்தே எண்களுக்குரிய சக்தியும் அதன் முக்கியத்துவமும் நாம் உணர்ந்து கொள்ளலாம்.
அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த எண்கள் உங்களுக்கு பொருந்தும் படி பெயராக அமைத்து விட்டால் உங்கள் வாழ்வில் அனைத்துமே சுபிட்சத்தை நோக்கி செல்ல ஆரம்பித்து விடும்.
உங்களில் யாருக்கெல்லாம் மன வேதனைகளும், தாங்க முடியாத சிரமங்களும் அல்லது வியாபார நஷ்டங்களும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம் போன்ற விஷயத்தில் தடைகளும் இருப்பவர்கள் உங்கள் பெயரை சரி பார்த்துக் கொள்வது நல்லது.
பிறந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு சிறந்த ஆண்டாக அமைய ஓம் தமிழ் காலண்டர் வாசகர்களாகிய உங்களுக்கு பிரத்யேகமாக இலவச பொது பலன்கள் தருவதாக இருக்கிறேன்.
உங்களுடைய பிறந்த தேதிக்கு உங்கள் பெயர் பொருந்தி இருக்கிறதா? இல்லையா? என்ற தகவல்கள் வரைக்கும் மாத்திரம் உங்களுக்கு பதில் குரல் பதிவாக அனுப்ப உள்ளேன்.
நீங்கள் எனக்கு அனுப்ப வேண்டிய தகவல்கள்
உங்களுடைய பிறந்த தேதி
உங்களுடைய முழு பெயர்மற்றும் வியாபார பெயர் ஏதேனும் இருந்தாலும் மற்றும் உங்கள் குழந்தைக்கு நீங்கள் பெயர் வைத்திருந்தாலும் அதை அவர்களுடைய பிறந்த தேதியுடன் கீழே தெரியும் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி மூன்று நாட்களுக்குள் பதில் பெறலாம்.
குறிப்பாக முதலில் வரும் 100 நபர்களுக்கு மாத்திரமே என்னால் அனுப்ப இயலும்.
இந்த புத்தாண்டு நிச்சயம் குரு அருளால் உங்களுக்கு சிறப்பாக அமையட்டும் என வாழ்த்துகிறேன்!
சிந்திப்போம்! சாதிப்போம்!