சஷ்டியன்று திருப்புகழை படிப்பதன் மகிமை

முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி திதியன்று விரதமிருந்து வணங்கிட தொழில் சிறந்து விளங்குவதுடன், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதையடுத்து, இன்று மாசி தேய்பிறை சஷ்டி விரதத்தின் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

திருப்புகழ்

சஷ்டி தினத்தன்று கந்தசஷ்டி கவசம், கந்த புராணம் மற்றும் திருப்புகழ் பாடல்களை படிப்பது மிகவும் சிறப்பாகும்.

சூரனை வதம் செய்வதற்காக அவதரித்த முருகன், அசுரனை வதம் செய்யாமல், அவனை ஆட்கொண்டு அருளியதில் இருந்தே கந்தனின் கருணையை காணலாம்.

சிவபெருமானிடம் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு.

ஆனால், முருகனிடம் தவறு செய்தவர்களுக்கு மன்னிப்பு கிடைப்பதுடன். முருகன் திருவடியில் இடமும் கிடைக்கும்.

அதனால், கஷ்டம், துயரம் எதுவாக இருப்பினும், முருகனை நினைத்து வணங்கிட வந்த வினைகளும், வருகின்ற வினைகளும், வரவிருக்கின்ற வினைகளும் தீரும் என்று அருணகிரிநாதர் கூறுகின்றார்.

திருப்புகழ் படலை படித்து வர நினைத்த காரியம் நிறைவேறும்.

ஏனெனில், திருப்புகழ் பாடுக என்று நூலுக்கான பெயரையும் கூறி, முத்தைத்தரு என்று பாட்டிற்கான முதல் அடியையும், அருணகிரிநாதருக்கு, முருகப்பெருமானே எடுத்து கொடுத்து பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்ததாக திருப்புகழ் உள்ளது.

மகிமை

திருப்புகழில் முருகப்பெருமானை மட்டுமின்றி விநாயகபெருமான், சிவபெருமான், அம்பாள், மகாவிஷ்ணு, ஐயப்பன், அனுமன் ஆகிய 6 தெய்வங்களையும் அருணகிரிநாதர் புகழ்ந்து பாடியுள்ளார்.

அதனால், திருப்புகழை பாடும்போது, முருகன் உள்பட 7 தெய்வங்களின் அருள் ஒரே நேரத்தில் கிடைக்கும் என்பது அதன் சிறப்பாகும்.

எனவே, இன்று மாசி மாத தேய்பிறை சஷ்டி தினத்தன்று விரதமிருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து முருகனை வணங்கி விரதத்தை தொடங்க வேண்டும்.

விரதம் இருக்க முடியாதவர்கள், இன்று முருகனை வணங்கி, கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் போன்றவற்றை பாராயணம் செய்யலாம்.

முருகனுக்கு செந்நிற மலர்கள் உகந்தது என்பதால், அரளி முதலான பூக்களால் அலங்கரித்து விளக்கேற்றி வழிபடுவது சிறந்ததாகும்.

மாலையில் அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று முருகனை வழிபட்டு விரதத்தை முடிக்கலாம்.

முருகப்பெருமானுக்குரிய செவ்வாய் கிழமையில் இன்றைய தேய்பிறை சஷ்டி வருவதையடுத்து, முருகனை வழிபடுவர்களுக்கு செவ்வாய்க்குரிய அங்காரகனின் அருளும் சேர்ந்து கிடைக்கும்.

பலன்கள்

தேய்பிறை சஷ்டியில் விரதம் இருப்பதால், குழந்தைப்பேறு கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்பாகும் என்பது ஐதீகம்.

எதிர்மறை மற்றும் துஷ்ட சக்திகள் அனைத்தும் நீங்கும்.

குடும்பத்தில் மனநிம்மதி உண்டாகும், எதிரிகள் தொல்லை நீங்கும்.

இந்நாளில் மாணவர்கள் முருகனை வணங்கிட கல்வியிலும், கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

அருணகிரிநாதருக்கு, முருகன் எடுத்துக்கொடுத்த பாடலைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவர்கள் அறிந்திட பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on