download_indicator

சர்க்கரை அளவை குறைக்க உதவும் சுண்டைக்காய்

தினந்தோறும், நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும், ஆற்றலும் கிடைக்கின்ற நிலையில், சுண்டைக்காயில் நுண் ஊட்டச் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இவை உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கின்றன. மேலும் நீரிழிவு, இதய நோய் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தருகின்றன. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, மற்றும் செடி அனைத்துமே மருத்துவ குணமுடையதாக உள்ளது. அவற்றின் இலைகள் உடலில் ஏற்படும் இரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவையாகவும், கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டவையாக பழங்கள் உள்ளன. மேலும், இவற்றில் வைட்டமின் ஏ,சி,இ சத்துக்கள் அதிகமாக உள்ளன. அதையடுத்து, சுண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மருத்துவ பயன்கள்

இரத்த சுத்திகரிப்பு

சுண்டைக்காய் குழம்பு, வத்தல் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி இரத்தம் சுத்தம் பெறும்.

சுண்டைக்காய் வற்றலில் இருக்கும் ஐஸோப்ளேவனாய்டுகள் என்னும் வேதிப்பொருளானது வீக்கத்தை குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது.

இரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து இரத்த குழாய்களில் படிவதை தடுக்க சுண்டைக்காய் உதவுகிறது.

இரும்புச்சத்து குறைபாடால் வரக்கூடிய இரத்த சோகையை தடுக்கும் குணம் சுண்டைக்காய்க்கு உள்ளது.

நோய் எதிர்ப்புசக்தி

வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், வைட்டமின் இ போன்றவை சுண்டைக்காயில் இருப்பதால் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரித்து உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது.

எலும்புகள்

சுண்டைக்காயில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் எலும்புகள் உறுதியடையும்.

வயிற்று பூச்சிகள்

நுண்ணுயிரிகள் நிறைந்த உணவுகளை குழந்தைகள் சாப்பிடுவதால் அவர்களின் வயிற்றில் பூச்சி தொல்லை ஏற்படுகிறது.

சுண்டைக்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகளை அழித்து குடல், வயிறு சுத்தமாகும்.

நீரிழிவு

கசப்பு நிறைந்த சுண்டைக்காய் நீரிழிவுக்கு நன்மை தரக்கூடியது.

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

நீரிழிவு அதிகரிக்கும் போது ஏற்படும் பாதிப்பை குறைக்கும் தன்மை கொண்டது.

பசியுணர்வு

சுண்டைக்காய்களை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுபவர்களுக்கு பசி உணர்வு அதிகமாகி உடல் ஆரோக்கியம் மேம்படுத்தும்.

சுவை திறன்

நாக்கில் சுவை அறியும் திறன் குறைந்திருக்கும்போது, சுண்டைக்காய்களை தினமும் சாப்பிட்டு வர சுவை அறியும் திறன் மீண்டும் அதிகரிக்கும்.

உணவை செரிக்க எச்சிலை நன்கு சுரக்க செய்யும்.

வயிற்று போக்கு

கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் இவற்றை சம எடையாக எடுத்து, நன்கு காயவைத்து, வறுத்து, இடித்துத் தூள் செய்துக் கொள்ள வேண்டும்.

இதனை, 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோருடன் கலந்து காலை, மாலை வேளைகளில், இரண்டு நாட்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு, நிற்கும்.

அஜீரணம்

எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை இரவில் அதிகம் உண்பது போன்ற காரணங்களால் சிலருக்கு அஜீரணம் ஏற்படுகிறது.

சுண்டைக்காய் வற்றல் தூள், 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோரில் கலந்து பகலில் மட்டும் குடித்து வந்தால் அஜீரண பிரச்சனை விரைவில் தீரும்.

மூலம்

கடுமையான மலச்சிக்கலே மூலம் நோய்க்கு பிரதான காரணமாக இருக்கிறது.

அதீத உடல் உஷ்ணம் மற்றும் கார உணவுகள் அதிகம் சாப்பிடுவதாலும் மூலம் உருவாகிறது.

இளம் சுண்டைக்காய்களை மிதமான காரம் பயன்படுத்தி குழம்பு செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வருவதால் மூலம் பிரச்சனை விரைவில் நீங்கும்.

சளித்தொல்லை

ஜலதோஷம் அல்லது சளி பாதிப்புகள் ஏற்பட்டவர்கள் சுண்டைக்காய் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் தொண்டை, சளிக்கட்டு குறையும்.

குரல்வளம்

சுண்டைக்காய்களை அடிக்கடி பக்குவப்படுத்தி சாப்பிட்டு வந்தால் குரல் வளம் சிறக்கும்.



Follow Us on