சர ராசிகள், சர லக்னங்கள் இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

ராசி மண்டலத்தில் உள்ள 12 ராசிகளை சரம், ஸ்திரம், உபயம் என்று மூன்று விதமாக ஜோதிடர்கள் பிரித்து வைத்துள்ளனர். மற்றபடி, சர ராசி அல்லது லக்னம் என்ற இரண்டும் ஒன்று தான். அதே போல, சர லக்னம் அல்லது சார லக்னம் என்ற இரண்டுமே ஒரே அர்த்தம் தான். வாருங்கள் மேற்கொண்டு இதன் விவரத்தைக் காண்போம்.

சர ராசிகள், சர லக்னங்கள்

மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும். இவற்றை லக்னமாக பெறும் போது அவையே சர, ஸ்திர, உபய லக்னங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதில் சர லக்னம் என்றெல்லாம் தனியாக ஒன்று இல்லை. சர லக்னத்தை தான் சில ஜோதிடர்கள் சார லக்னம் என்கின்றனர். ஆனால், அப்படி அழைப்பது தவறு. சர லக்னம் என்பதே சரி.

தனித்தன்மைகள்

சரம்

சர ராசியில் பிறந்த ஜாதகருக்கு பதினோராம் இட அதிபதியான லாபாதிபதியால் நற்பலன்கள் இல்லை. ஏனெனில் அந்த திசை காலங்களில் வீடு, பொருள் நஷ்டமும் அரசாங்க பகையும் உண்டாகும். எனினும் லாப ஸ்தானாதிபதி 1, 5, 9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் இருந்தால் நன்மையான பலன்களை தருவார்.

ஸ்திரம்

ஸ்திர ராசி லக்னமாக அமையப்பெற்ற ஜாதகருக்கு நன்மை செய்யும் பாக்கிய ஸ்தானாதிபதியான 9-ஆம் இட அதிபதியால் தீமையே உண்டாகும். அதே சமயத்தில் பாக்கியாதிபதி 1, 5, 9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் நின்றால் அரசாங்க நன்மை முதலான யோகங்கள் உண்டாகும். மற்ற இடங்களில் நின்றால் பிரயோசனம் இல்லை. நற்பலன்கள் உண்டாவதில்லை. எடுத்த தொழிலில் முற்று பெறாமல் தடை உண்டாகும்.

உபயம்

உபய ராசியில் ஜனித்த ஜாதகருக்கு கேந்திர ஸ்தானாதிபதிகளில் 7-ஆம் இட அதிபதி நற்பலன்களைத் தரமாட்டார். சர ராசியே சிலருக்கு லக்னமாக அமைந்தால் அதுவே சர லக்னம் (அல்லது சர லக்னம்) எனப்படும்.

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் சர ராசியில் பிறந்தவர்கள் பலர் எப்படியும் முன்னுக்கு வந்து விடுவார்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக ஸ்திர ராசியில் பிறந்தவர்கள் இரண்டாம் பட்ச முன்னேற்றத்தை அடைவார்கள். உபய ராசியில் பிறந்தவர்கள் ஓரளவே நற்பலன்களை பெற இயலும் என்பது பொதுவான கருத்தாகும்.



Follow Us on