
கிருஷ்ண பகவானின் வாகனமாக கருதப்படுகின்ற கருடனை வணங்குகிறவர்களுக்கு கருடனின் ஆற்றலும், கிருஷ்ணரின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒரு காரியமாக புறப்படும்போது கருடனை கண்டால் அது வெற்றியடையும் என்றும், கருடனின் குரலை கேட்பதும் நல்ல சகுனம் என்று கூறப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த கருடனை போற்றி வேதாந்த தேசிகர் அருளிய ஸ்ரீ கருட தண்டகத்தை சனிக்கிழமையன்று படிப்பது நல்லதாகும்.
தூப்புல் பிள்ளை
காஞ்சிபுரம் அருகேயுள்ள தூப்புல் என்ற இடத்தில் அனந்தசூரி சோமயாஜி, தோதாரம்மா ஆகியோரின் மகனாக 1268-ஆம் ஆண்டு, புரட்டாசி மாதம், திருவோண நட்சத்திரத்தன்று வேதாந்த தேசிகர் பிறந்தார்.
திருமலையில் உள்ள திருமணியின் அம்சமாக இவர் அவதரித்ததால், 'வேங்கடநாதன்' என்று அவரது பெற்றோர் பெயரிட்டனர்.
தூப்புலில் தோன்றியதால் இளமைக்காலத்தில் வேதாந்த தேசிகர் 'தூப்புல் பிள்ளை' என்றும் அழைக்கப்பட்டார்.
தமது அறிவு மற்றும் ஆற்றல் காரணமாக 27-வது வயதிலேயே பல சீடர்களைப் பெற்று வைணவ குரு என்ற உயர்நிலையை அடைந்தார்.
வேதாந்தத்தில் சிறந்து விளங்கியதால் இவரை வேதாந்த தேசிகர் என்றழைக்கத் தொடங்கி, காலப்போக்கில் அவரது இயற்பெயர் மறைந்து அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.
கருட தண்டகம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் வடமொழி, தமிழ் மொழி ஆகிய இரண்டிலும் பெரும் புலமை பெற்று விளங்கி 150-க்கும் மேற்பட்ட மிகச் சிறந்த நூல்கள் எழுதியுள்ளார்.
அதில் ஒன்றான கருட தண்டகத்தை தினமும் படித்து வந்தால் சகல செளபாக்கியம் கிடைக்கும்.
விஷகடி பயம், எதிாிகள் தொல்லை, கடன் பிரச்சினை, மனக்கவலை போன்று எதுவும் அருகில்கூட வராது.
அத்தகைய சிறப்பு வாய்ந்த கருட மந்திரமானது, கருடனை குறித்து வேதாந்த தேசிகா் கருட மலையில் (திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோயில்) தவமிருந்தபோது அவருக்கு கிடைக்கப் பெற்றதாக கூறப்படுகிறது.
நம: பந்நக நத்தாய
வைகுண்ட்ட வச வா்த்திநே |
ச்ருதி ஸிந்து ஸதோத்பாத
மந்தராய கத்தமநே ||
கருட மகில வேத நீடாதிருடம்
திவிஷத் பீடநோத் கண்ட்டி
தாகுண்டவைகுண்ட பீடீக்ருத
ஸ்கந்த்மீடே ஸ்வநீடா
கதிப்ரீத ருத்ரா ஸூகீா்த்தி
ஸ்தநாபோக காடோபகூட
ஸ்ப்புரத்தண்டக வ்ராத வேத
வ்யதா வேபமாந த்விஜிஹ்
வாதிபாகல்ப விஷ்ப்பாா்யமாண
ஸ்ப்படாவாடிகா ரத்ந
ரோசிச்சடா ராஜி நிராஜிதம் காந்தி
கல்லோலிநீ ராஜிதம்
ஜய கருட ஸூபா்ண
தா்வீகராஹார தேவாதிபாஹார
ஹாரிந் திவெளகஸ்பதி க்ஷிப்த
தம்போளி தாரா கிணா
கல்ப கல்பாந்த வாதூல
கல்போதயாநல்ப வீராயி
தோத்யச் சமத்கார தைத்யாாி
ஜைத்ர த்வஜாரோஹ
நிா்த்தாாிதோத்கா்ஷ
ஸங்கா்ஷணாத்மந் கருத்மந் மருத்
பஞ்சகாதீச ஸத்யாதிமூா்த்தே
ந கச்சித் ஸமஸ் தே நமஸ் தே
புநஸ் தே நம :
நம இத மஜஹத் ஸபா்யாய
பா்யாய நிா்யாத பக்ஷா
நிலாஸ்ப்பாலநோத்வேல
பாதோ தி வீசீ சபேடாஹதா
காத பாதாள பாங்காரா
ஸங்க்ருத்த நாகேந்த்ர பீடா
ஸ்ருணீ பாவ பாஸ்வந் நக
ச்ரேணயே சண்ட துண்
டாய ந்ருத்யத் புஜங்க ப்ருவே
வஜாிணே தம்ஷட்ரயா
துப்யம் அத்யாத்ம வித்யா
விதேயா விதேயா பவத்தாஸ்ய
மாபாதயேதா தயேதாச் ச மே
மநூநுகத பக்ஷி வக்த்ர
ஸ்ப்புரத் தாரகஸ் தாவக
சித்ரபாநுப்ாியா சேகரஸ்
த்ராயதாம் நஸ் த்ரிவா்க்க
வா்க்க ப்ரஸுதி : பரவ்யோம
தாமந் வலத்வேஷித்
ஜ்வலத் வாலகில்ய ப்ரதிஜ்ஞா
ஜாவதீா்ண ஸத்திராம தத்த்வ
புத்திம் பராம் பக்திதேநும்
ஜகந்மூல கந்தே முகுந்தே
மஹாநந்த தோக்த்ரீம் ததீதா
முதாகாம ஹீநா மஹீநா
மஹீநாந்தக ||
ஷட் த்ரிம்சத்கண சரணோ நர
பாிபாடீ நவீந கும்ப கண : |
விஷ்ணுரத தண்டகோஸ்யம்
விகடயது விபக்ஷ வாஹிநீ வ்யூஹம் ||
விசித்ர ஸித்தித : ஸோஸ்யம்
வேங்கடச விபச்சிதா |
கருடத்வஜ தோஷயா கீதோ
கருட தண்டக ||
வேதாந்தத தேசிகா் அருளிய கருட தண்டகத்தை பாராயணம் செய்வதால், எதிாிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடுவாா்கள்.
இந்த கருட தண்டகம், நினைத்த காாியத்தை முடித்து கொடுக்கும் வல்லமை கொண்டதாகும்.
நீண்ட நாட்களாக நோயால் அவதியடையும் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் கருட தண்டகத்தின் மகிமையை அறிந்திட ஷேர் செய்யுங்கள்.