download_indicator

உடல் எடையை சீராக்கும் புடலங்காய்

நாம் உணவாக உட்கொள்ளும் காய் வகைகளில் புடலங்காய் பலவிதங்களில் நன்மையளிக்கும் ஒன்றாகும். இதில் ஏராளமான மருத்துவப் பயன்கள் நிறைந்துள்ளது. மேலும், இதன் காய், வேர், இலை ஆகியவற்றிலும் மருத்துவப் பயன்கள் உள்ளது. இப்போது இந்த புடலங்காயின் மருத்துவக் குணங்களைப் பற்றி காண்போம்.

பயன்கள்

பொதுவாக, புடலங்காயில் நீர் சத்து அதிகமாக உள்ளதால், இதை சிறிதளவு சாப்பிட்டவுடன் வயிறு நிறையும்.

புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.

உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

புடலங்காயை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும்.

நீரிழிவு (சர்க்கரை) உள்ளவர்கள், புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், அனைத்து வகையான சத்துகளும் நீரிழிவு நோயாளிகளுக்கு கிடைக்கும்.

குடல்புண் உள்ளவர்கள் வாரம் ஒரு முறை, புடலங்காயை உணவில் சேர்த்து கொண்டு வந்தால் வாய்ப்புண், குடல் புண், தொண்டைப் புண் ஆகியவை குணமாகும்.

உணவு செரிக்காமல் இருப்பவர்கள், புடலங்காயை கூட்டு செய்து சாப்பிட்டால் எளிதில் செரிமானம் ஆகும்.

பெண்கள் புடலங்காயை குழம்பு வைத்து சாப்பிட்டு வந்தால், கருப்பை கோளாறுகள் நீங்கும்.

மிகவும் மெலிந்த உடல் எடை கொண்டவர்கள், உடல் சூடு உள்ளவர்கள் அடிக்கடி புடலங்காயை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது.

புடலங்காய் சாறு

இதயக்கோளாறு உள்ளவர்கள், புடலங்காய் இலையின் சாறு எடுத்து தினந்தோறும், 2 தேக்கரண்டி வீதம் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் அனைத்தும் நீங்கி விடும். புழுவெட்டு மற்றும் பொடுகு தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள், புடலங்கொடியின் இலையை அரைத்து தலையில் தடவ, புழுவெட்டு மறையும்.

புடலங்காய் வேர்

புடலங்காயின் வேரை ஒரு கைப்பிடி எடுத்து, மையாக அரைத்து சிறிதளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.

புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர உடல் எடை கட்டுப்பாட்டில் இருப்பதையடுத்து, சிறுநீரகம் சீராக இயங்க, நுரையீரல் தூய்மையடைய மற்றும் சுவாச பிரச்சினைகளுக்கு தீர்வுக்கான உங்கள் வீட்டில் எப்போதும் நோய் நீக்கும் காய்களும் கீரைகளும், பழங்களும் பயன்களும், நோய் நீக்கும் மருந்தில்லா மருத்துவம் போன்ற உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான புத்தகங்களை வைத்திருக்க இங்கே அழுத்தவும்.



Follow Us on