
அயல்நாடுகளில் மழைபெய்தால், மிகச் சிறந்த தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பயன்படுத்தி மலை நீரை அப்படியே பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல, நம் நாட்டிலும் இந்த நடைமுறைகளைச் செயல்படுத்துவதற்கான பல சாத்தியக் கூறுகள் உள்ளன. அவை குறித்த விரிவான விவரங்கள் கீழே தொகுக்கப் பட்டுள்ளன.
1. ஜெர்மனி
ஜெர்மனியில் வீட்டு வாசல்களில் அல்லது முற்றங்களில் சிமெண்ட் தளம் அமைத்து மழைநீர் மண்ணுக்குள் செல்வதைத் தடுப்பவர்களுக்கு "மழைநீர் வடிகால் கட்டணம்" (stormwater tax) வரியாக வசூலிக்கப்படுகிறது.
ஆனால், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வைத்திருப்பவர்களுக்கும், தரைத்தளத்தில் மழைநீர் உறிஞ்சும் கற்கள் (Permeable pavements) பதித்திருப்பவர்களுக்கும் இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
பெரிய விமான நிலையங்களில், கூரைகளில் விழும் மழைநீர் சேகரிக்கப்பட்டு கழிவறைகள் மற்றும் குளிர்சாதன அமைப்புகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
சிங்கப்பூர்
நிலப்பரப்பு குறைவாக உள்ள நாடான சிங்கப்பூர், நாட்டின் மொத்த பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்கு நிலத்தை மழைநீர் சேகரிப்புப் பகுதியாக மாற்றியுள்ளது.
சாலைகளில் விழும் மழைநீரைக் கூட பெரிய வடிகால் மற்றும் கால்வாய்கள் மூலம் நீர்நிலைகளுக்குக் கொண்டு சேர்க்கும் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.
விமான நிலையம் போன்ற பெரிய இடங்களில் விழும் மழைநீர், சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக பயன்படுத்தப்படுகிறது].
ஜப்பான்
டோக்கியோ போன்ற நெரிசலான நகரங்களில் சிறிய அளவிலான சமூக மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் உள்ளன. வீட்டின் கூரைகளில் இருந்து சேகரிக்கப்படும் நீர் அவசரக் காலங்களில் தீயணைப்பதற்கும், செடிகளுக்குப் ஊற்றுவதற்கும், சுத்திகரிப்புக்குப் பின் குடிநீராகவும் பயன்படுகிறது.
மேலும், கனமழையினால் ஏற்படும் வெள்ளத்தைத் தடுக்க பிரம்மாண்டமான நிலத்தடி சேமிப்புக் கிடங்குகளை அமைத்து, நீரைச் சேமித்து வைத்துப் பின்னர் பயன்படுத்து கின்றனர்.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் உள்ள பள்ளிகள் மற்றும் வீடுகளில் பெரிய மழைநீர் சேமிப்புத் தொட்டிகளை அமைப்பதற்கு அரசு மானியம் வழங்குகிறது. இந்த நீர் வீட்டுத் தேவைகளுக்கும் தோட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
மக்களே!
அயல்நாட்டார் எல்லோருமே உணர்ந்திருக்கிறார்கள்…
மழை நீர்… உயிர் நீர்…
நமது முன்னோர்களும் உணர்ந்தவர்கள் தான். நாம் உணர வேண்டாமா?
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
- திருவள்ளுவர்