download_indicator

பிறை தரிசனம் காண்பது எதற்காக?

வானில் 30 நாட்களுக்கு ஒரு முறை மட்டும், அதுவும் குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டுமே மூன்றாம் பிறை தெரிவதால், அது தெய்வத்திற்கு நிகரானதாக கருதப்படுகிறது. மேலும், பிறை தரிசனம் காண்பவரின் குடும்பத்தில் வளர்ச்சி இருக்கும் என்பதாலே, பிறை தரிசனம் காண்பது சிறப்பு என்று சாஸ்திரம் கூறுகிறது. இந்நிலையில், இன்று மூன்றாம் பிறை தினத்தன்று பிறை தரிசனம் காண்பதன் அவசியத்தை அறிந்திடுவோம்.

மூன்றாம் பிறை

அமாவாசைக்கு பிறகு வருகின்ற துவிதியை திதி இருக்கும் தினத்தன்றே மூன்றாம் பிறை தெரியும்.

மிக மெல்லிய கம்பி போன்று அழகாக தெரியும் பிறை, வானில் சில நிமிடங்கள் மட்டுமே காட்சியளிக்கும்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த மூன்றாம் பிறை, சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தின் காரணமாக தெரிகிறது.

சந்திரனுக்கு எப்போதுமே, தான் மிகுந்த அழகுடன் இருப்பதாக ஒரு கர்வம் உண்டு.

அதனாலே, அவன் யாரையும் அலட்சியமாக கருதியதால், விநாயக பெருமானையும் ஒரு முறை மதிக்காமல் அவரது வடிவைக்கண்டு கேலி செய்தான்.

அதனால் கடும் சினமடைந்த விநாயகர், சந்திரனின் அழகு தேய்ந்து போகும் என்று சாபம் விடுத்தார்.

உடனடியாக சந்திரனின் அழகு பறிபோனதுடன், அவனது முகமும் விகாரமானதால், சந்திரனின் மனைவி ரோகிணியே அவனைக் கண்டு அச்சமடைந்தாள்.

இதுகுறித்து கவலை அடைந்த சந்திரன், தனது தவறுக்கு மனம் வருந்தி சிவபெருமானை நோக்கி தவம் செய்தான்.

அதன் பலனாக, சிவபெருமான் அருளால் இழந்த அழகை சந்திரன் மீண்டும் பெற்றாலும், அவனது கலைகள் 15 நாட்களுக்கு ஒருமுறை வளர்ந்து தேயும் என்ற வரத்தை பெற்றான்.

அவசியம்

சந்திரனின் மூன்றாம் பிறையை சிவபெருமான் தனது சிரசில் சூடி காட்சியளிக்கும்போது சந்திர மௌலீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

அதனால், மூன்றாம் பிறையை காண்பது சிவபெருமானையே காண்பதற்கு சமமாகும்.

எனவே, இன்று அனைவரும் தவறாமல் குடும்பத்துடன் மூன்றாம் பிறை தரிசனத்தை காண்பது அவசியமாகும்.

சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.

சந்திரனுக்கும், ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதால், இன்று மூன்றாம் பிறையை காண்பவர்களின் ஆயுளும் தீர்க்காயுளாக இருக்கும்.

மனதில் வேண்டியது அனைத்தும் நிறைவேறுவதுடன், பல்வேறு தோஷங்களையும் நீக்கும்.

மூன்றாம் பிறையை அணிந்து கொண்ட சிவபெருமான் எவ்வாறு அழைக்கப்படுகிறார் என்பதை உங்களுக்கு தெரிந்தவர்கள் அறிந்திட பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on