download_indicator

பிள்ளையார்பட்டி விநாயகரின் சிறப்புகள்!

2500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான குடைவரைக்கோயிலாக, தனது இரு கரங்களைக் கொண்டு அருள்புரிகின்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், வேண்டுதல்களை நிறைவேற்றுவதாகவும், செழிப்பான வாழ்வைத் தருவதாகவும் நம்பப்படுகிறது. அத்தகைய பெருமை வாய்ந்த பிள்ளையார்பட்டி விநாயகரின் சிறப்புகளை அறிந்திடலாம்.

6 அடி உயரத்தில்

நாடு முழுவதும் விநாயகருக்கு பிரம்மாண்டமான கோயில்கள் இருப்பினும், தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் சிறிய மலையின் அடிவாரத்தில், குடைவரை கோயிலாக அமைந்துள்ள பிள்ளையார்பட்டியில் இருக்கின்ற கற்பக விநாயகர் 6 அடி உயரத்தில் வீற்றிருக்கின்றார்.

கற்பக விநாயகருக்கு, தேசிவிநாயகப் பிள்ளையார் என்ற பெயரும் உள்ளது, தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க அழகுவாய்ந்த விநாயகர் என்று பொருளாகும்.

அதேபோல் அர்ஜூன மரம் எனப்படும் மருத மரம் இருக்கின்ற விநாயகர் கோயிலில் இக்கோயிலும் ஒன்றாகும்.

முருகனுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பதுபோல் விநாயகருக்கும் ஆறு படைவீடுகள் இருக்கின்றன, அதில் இந்த கற்பக விநாயகர் கோயில் ஐந்தாவது படை வீடாக கருதப்படுகிறது.

கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும் மற்றொரு பகுதி கற்றளி ஆகவும் உள்ளது.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் சன்னதி மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளதால், இந்த விநாயகர் சன்னதியை வலம் வர முடியாது.

முழு முதற் கடவுளாகிய விநாயகருக்குச் சிறப்பு சேர்க்கும் தினமாக சதுர்த்தி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அதனால், இந்நாளில் விரதமிருந்து விநாயகரை வழிபட மிக சிறப்பு வாய்ந்ததாகும்.

விநாயகரின் சிறப்புகள்

சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல், பிள்ளையார்பட்டியில் மட்டும் இரண்டு கரங்களை கொண்டு விளங்குகிறார்.

இங்கு பெருமானின் துதிக்கை வலபுறம் சுழித்ததாக இருப்பதால் வலம்புரி விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.

வயிறு ஆசனத்தில் படியாமல் கால்கள் மடித்திருக்க அமர்ந்திருக்கிறார்.

வலத்தந்தம் நீண்டும் இடத்தந்தம் குருகியும் காணப்படுகிறார்.

வலக்கரத்தில் சிவலிங்கத்தைத் தாங்கி, அங்குச பாசங்கள் இல்லாமல் காட்சியளிக்கின்றார்.

விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒருசில இடங்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று.

விநாயகருக்கும், சண்டிகேசுவரருக்குமாக 2 தேர்கள் இழுக்கப்படுகின்றன.

விநாயகர் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும், மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செல்வது குறிப்பிடத்தக்கது.

சண்டிகேசுவரருக்கான தேரை பெண்களும், குழந்தைகளும் மட்டுமே இழுத்துச் செல்வர்.

ஆவணி திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்ச்சியாக நடைபெறும் தேர் திருவிழாவின்போது, பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வது தனி சிறப்பாகும்.

சந்தனக்காப்பு

9-ஆம் நாள் தேர்விழா நடைபெறும் நாளில் மூலவருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாற்றப்படுகிறது.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியன்று, உச்சிகால பூஜையின்போது விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட பெரிய அளவிலான ஒரே கொழுக்கட்டை தயாரித்து நைவேத்தியம் செய்யப்படுவது சிறப்பு பெற்றதாகும்.

ஆவணி சதுர்த்தி விழாவின்போது ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பிள்ளையார்பட்டி விநாயகருக்கு சந்தனக்காப்பு செய்யப்படுவது பற்றி விநாயக பக்தர்கள் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.



Follow Us on