download_indicator

பெயர் மாற்றம் அல்லது பெயர் திருத்தம் எப்படி செய்வது?

ஓம் தமிழ் காலண்டர் வாசகர்களுக்கு எண்கணித ஜோதிட நிபுணர் Dr நவீன் சுந்தரின் இனிய வணக்கங்கள். எண்கணித ஜோதிட முறையில் ஒருவரது பெயர் சரியாக இருக்கிறதா என்பதை சுருக்கமாக மூன்று பெரும் பிரிவுகளில் பிரிக்கலாம். அவை உத்தமம், மத்திமம், அதமம் என்று குறிப்பிடலாம். உத்தமம் என்பது சிறந்தது என்பதால் மிகவும் அபூர்வமாக தான் இது அமையும். மேல் நிலை எண்கணித முறையில் பெயர் எண்ணுடன் சேர்த்து சூட்சும எண்ணும் துணை செய்வது இந்த வகையில் சேரும். பெரும்பாலும் இருப்பது மத்திமம் வகையில். இவர்களுக்கு பெயர் திருத்தம் என்பது கட்டாயம் இல்லை. அதாவது உத்தமம் வகைக்கு அடுத்த வகை என்று சொல்லலாம். வாழ்க்கை பயணத்தில் இடர்பாடுகள், தடைகள் வந்தாலும் அதை கடந்து வெற்றி இலக்கை நோக்கி சென்று விடுவார்கள். ஆரம்ப நிலை எண்கணித முறையை, அதாவது பிறந்த தேதிக்கு பொருத்தமாக இருக்கிறதா, என்றும் பெயரின் தொடக்க எழுத்தை கொண்டு பெயரை தேர்வு செய்யும் முறையை பயன்படுத்தி இருப்பார்கள். இவர்கள் எல்லாரும் மத்திமம் வகை என்று சொல்லலாம். இவர்களுக்கு பெயர் திருத்தம் என்பது கட்டாயம் இல்லை. மூன்றாவது வகை அதமம் என்ற பிரிவில் உள்ளவர்கள். பெரும்பாலும் அடுத்தவர் செய்த தவறு இவர்கள் முன்னேற்றத்துக்கு தடை செய்யும்.

பொருத்தம் இல்லாத பெயர்

பொருத்தம் இல்லாத பெயரை வைத்து இருப்பார்கள். தனக்கு தானே பெயரை மாற்றி கொள்பவர்கள் இந்த வகையில் இருப்பார்கள். இந்த பிரிவில் உள்ளவர்களை எளிதாக அடையாளம் காணலாம். தொடர் தடைகள் அல்லது தோல்விகள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருப்பது போன்றவை சில காரணங்களாக சொல்லலாம். இவர்களுக்கு பெயர் மாற்றம் அல்லது பெயர் திருத்தம் அவசியம் என்று சொல்லலாம். எந்த எண்ணில் பிறந்தவர்களுக்கும் இந்த மூன்று வகைகளும் பொருந்தும். குறிப்பாக சந்திரனை குறிக்கும் இரண்டாம் எண், ராகு குறிக்கும் நான்காம் எண், கேது குறிக்கும் 7-ம் எண் மற்றும் சனி குறிக்கும் 8-ம் எண்ணில் பிறந்தவர்கள் என்று சொல்லலாம். நாம் தான் அந்த எண்ணில் பிறக்கவில்லையே என்று நினைப்பவர்கள் பிறந்த தேதி, மாதம், வருடம் என மூன்றையும் கூட்டி பார்த்தால் மேற்கூறிய எண்களில் பிறந்திருக்கும் வாய்ப்பு உண்டு.

''வெற்றி என்பது இலக்கு''



Follow Us on