
பெண்கள் சில பொருட்களை பயன்படுத்தும் போது ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுகிறது. அதையடுத்து, பெண்களுக்கு ஏற்படும் அலர்ஜி வகைகள் பற்றியும் அதனை குணப்படுத்தும் முறை பற்றியும் பார்ப்போம்.
இளநரை
இன்றைய பெண்கள் இளநரை தொல்லையை மறைக்க கலரிங், டை பயன்படுத்துகிறார்கள்.
அலர்ஜி உள்ளவர்கள் தங்கள் தலை முடிக்கு டை போட்டதும், வகிடு பகுதியில் அரிப்பு, சிவப்பாக பொரி பொரியாகத் தோன்றுதல் போன்ற அலர்ஜி அறிகுறிகள் காணப்படும். மேலும் முகம் கருமை படர்ந்ததுபோல் இருக்கும். 'ஹெர்பல் ஹேர் டை' என்ற பெயரில் விற்பனைக்கு வரும் பெரும்பாலான டைகளில் மூலிகைப் பொருட்கள் சேர்க்கப்படுவது இல்லை.
மூலிகைகள் சேர்க்கப்பட்ட டையை வாங்குவது நல்லது அல்லது 'லெஸ் பொட்டென்ஷியல் ஹேர் டை' என்கிற பெயரில் கிடைக்கும் டைகளை பயன்படுத்தலாம். எந்த டையானாலும் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு முறை அலர்ஜி டெஸ்ட் செய்து கொள்வது அவசியம்.
நெற்றியில்
நெற்றியில் வைத்துக் கொள்ளும் சாந்து, தரமற்ற குங்குமம் மற்றும் ஸ்டிக்கர் பொட்டில் உள்ள பசையினால் அலர்ஜி ஏற்படலாம். இதனால் நெற்றிப் பகுதி தோல் உரிந்து சிவப்பாக தடித்து விடும்.
நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில், வாஸ்லின் தடவி, அதற்கு மேல் வீட்டில் உள்ள காபிப் பொடியை பொட்டு வடிவில், தொட்டு வைத்துக் கொள்ளலாம். அலர்ஜி பிரச்சனை தீரும்.
தோலில் கோடுகள்
முகம், கை, கால்களில் உள்ள முடியை நீக்குவதற்காக பல்வேறு க்ரீம்களை பயன்படுத்துவதால் இந்த அலர்ஜி ஏற்படலாம். இந்த வகை க்ரீம்களில் சேர்க்கப்படும் இரசாயனப் பொருட்களால் அலர்ஜி ஏற்பட்டு, தோல் பகுதியில் கோடு போல பொரி பொரியாக சிவந்து தடித்துப் போகும்.
நாளடைவில், அந்த இடம் வெள்ளையாகவே மாறிவிடும். இதை முழுமையாக சரி செய்யவும் முடியாது. எனவே உடனடியாக அந்த க்ரீம்களை தவிர்த்து விடுவது தான் நல்லது.
கொப்பளங்கள்
அழகழகாக மின்னும் சில நவீன வகை உலோக நகைகளை அணியும்போது கை, கழுத்து, காது பகுதிகளில் அரிப்பு, கொப்பளங்கள் ஏற்படுகிறது. இன்னும் சிலருக்கு தங்க நகைகளும் அலர்ஜியை ஏற்படுத்தும்.
உலோகத்தால் ஆன ஆபரணங்களை இவர்கள் தவிர்த்து, மர வேலைப்பாடுகள் கொண்ட ஆபரணங்களையோ, தோலினால் செய்யப்பட்ட நகைகளையோ பயன்படுத்துவது நல்லது.
உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பழங்களும் பயன்களும், நோய் நீக்கும் காய்களும் கீரைகளும், நோய் நீக்கும் மருந்தில்லா மருத்துவம் என்ற புத்தகங்களை வைத்திருக்க இங்கே அழுத்தவும்.