பரிகாரம் செய்ய முடியாத தோஷமும் உண்டா?

திருமண தோஷம், புத்திர தோஷம் என பல வகையான தோஷங்கள் உண்டு. அதே சமயம் அதற்கு பரிகாரமும் உண்டு. ஆனால் பரிகாரம் செய்ய முடியாத தோஷங்களுக்கு என்ன செய்வது? அறிவோம் வாருங்கள்.

என்ன தோஷம்?

ஒருவர் முற்பிறவியில் பல பேர்களை ஏமாற்றி இருந்தால் இந்த பிறவியில் அவர் ஏமாறும் நபராக பிறந்திருப்பார். ஜோதிட ரீதியாக இதை "அவயோக தோஷம்" என்று குறிப்பிடுவார்கள். இந்த தோஷத்திற்குப் பரிகாரம் கிடையாது.

இராகு கேதுக்கள் தரும் கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் முழுமையாக செய்ய முடியாது.

இராகு மட்டும் தனித்து சுப பார்வை இன்றி ஐந்தாம் இடத்தில் இருந்து. ஐந்தாம் அதிபதி ஆறு, எட்டு, 12 இல் மறைந்தால் அது கடுமையான புத்திர தோஷம். அவர்களுக்கு பிள்ளை செல்வமே இருக்க வாய்ப்பு இல்லை.

பரிகாரம்

மேற்கண்ட மூன்று தோஷங்களும் பரிகாரம் இல்லாத தோஷங்கள் ஆகும். எனினும், தோஷத்தின் பாதிப்புகளை குறைக்க முடியும். இதற்கு குலதெய்வ வழிபாடே மிகச்சிறந்த ஒன்றாகும். அவரவர் குல தெய்வத்தை தொடர்ந்து வழிபட்டு வந்தால், எந்த விதமான தோஷத்திலிருந்தும் அத்தெய்வங்கள் பாதுகாக்கும்.



Follow Us on