பாரம்பரியமான உளுந்து கஞ்சியின் பயன்கள்
நமது முன்னோர்கள் ஏராளமான மருத்துவ குணம் வாய்ந்த உணவு வகைகளை உண்டு நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். அப்படி அவர்கள் சாப்பிட்ட சத்தான உணவு வகைகளில் ஒன்றுதான் உளுந்து கஞ்சி. இவற்றை எப்படி ருசியாக செய்வது என்றும், இதில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பது பற்றியும் அறிந்து கொள்வோம்.
உளுந்து கஞ்சி செய்முறை
உளுந்து - 1/4 கிண்ணம்
வெல்லம் - 1 /2 மூடி
ஏலக்காய் - 2
தேங்காய் துருவல் - சிறிதளவு
உளுந்தை 30 நிமிடத்திலிருந்து 45 நிமிடங்கள் ஊற வைத்து மைய அரைத்து ஒரு அகலமான பாத்திரத்தில் இட்டு, மாவிற்கு ஏற்ப இரண்டு மடங்கு நீர் ஊற்றி நன்றாக கொதிக்கும் வரை கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பின், வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து வெல்லப்பாகு தயாரித்து மாவில் ஊற்றி ஏலக்காய் இடித்து போட்டு கடைசியாக சிறிதளவு தேங்காய் துருவலை தூவி இறக்கினால், சுவையான உளுந்து கஞ்சி தயார் . தேவையானால், சிறிதளவு பால், நெய்யில் வதக்கிய முந்திரி மற்றும் உலர் திராட்சைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
நன்மைகள்
உளுந்தில் வைட்டமின் A, K, E மற்றும் B வகை ஊட்டச்சத்துகள் ( B1, B3, B5, B6), இரும்பு சத்து, போலேட், கால்சியம், பொட்டாசியம் போன்ற எண்ணற்ற சத்துகள் நிரம்பியுள்ளது.
இது இருதயத்திற்கு ஆரோக்கியமளிப்பதுடன் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.
நரம்பு தளர்ச்சி, பக்க வாத பிரச்சினைகளுக்கு ஏற்ற சிறந்த மருந்தாக உளுந்து கஞ்சி உதவுகிறது.
எலும்புகளுக்கு நல்ல உறுதி அளிக்க கூடியது. எனவேதான், எலும்பு முறிவு ஏற்படுபவர்களுக்கு விரைவில் குணமாக உளுந்து மாவு அரைப்பை கட்டுடன் சேர்த்து போடுவார்கள்.
பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்பு வலிக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. எனவேதான், கிராமங்களில் பெண்கள் பூப்படைதல் சடங்கின்போது உளுந்து, வாழைப்பழம், முட்டை மற்றும் சர்க்கரை கலவை கொடுக்கப் படுகிறது.
தோல் சம்பந்தமான நோய்களுக்கு ஆயுர்வேதத்தில் மருந்துகளில் ஒன்றாக பயன்படுகிறது.
வெறும் 100 கிராம் உளுந்தில் 18 கிராம் நார்சத்து உள்ளது. மேலும், இவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
உளுந்துடன் சிறிதளவு வெந்தயம் சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு பிரச்சினை நீங்குவதோடு உடல் உஷ்ணம் நீங்கும்.
வயிற்று போக்கு, மலசிக்கல், உடல் சோர்வு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது.
இவ்வளவு மகத்துவம் நிறைந்ததன் காரணமாகவே சில வீடுகளில் சமையலின்போது கடுகுடன் உளுந்து சேர்த்து பயன்படுத்துகிறார்கள்.
சடங்காகும் பெண்களுக்கு உளுந்து கலவை கொடுப்பதன் காரணத்தை உங்களுக்கு தெரிந்த அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.(ஷேர்)