download_indicator

பரம்பரை என்பது எப்படி வந்தது?

வீட்டில் சில பெரியவர்கள் பேசும்போதும், ஒரு சில திரைப்படங்களிலும் பரம்பரை, பரம்பரையாக காத்துவந்த கௌரவம், மரியாதை, பதவி என்று வசனம் பேசுவதை பார்த்திருப்போம். இதில், பரம்பரை என்று கூறுவது ஒரு குடும்பத்தின் முந்தைய தலைமுறையினர் என்று கருதப்படுகின்ற நிலையில், இந்த பரம்பரை என்ற பெயர் எதற்காக, எப்படி வந்தது என்று பார்க்கலாம்.

ஆயிரம் அர்த்தங்கள்

பண்டைய தமிழர்கள் கடைபிடித்து வந்த ஒவ்வொரு பழக்க வழக்கங்களும் ஆன்மீகம், அறிவியல் ரீதியாக என்று பல்வேறு விசயங்களையும், நன்மைகளையும் கொண்டுள்ளன.

பண்டைய காலத்தில் கூறப்பட்ட விசயங்கள், கருத்துகளை, தற்போதைய வாழ்வில் இருப்பவர்கள், குறிப்பாக இன்றைய காலத்தை சேர்ந்தவர்கள் எக்காரணம் கொண்டும் காது கொடுத்து கேட்பதில்லை.

அதில் நல்ல கருத்துகள் இருக்கிறதா, இல்லையா என்றெல்லாம் சிந்தித்தும் பார்ப்பதில்லை, காது கொடுத்தும் கேட்பதில்லை.

ஒரேயடியாக அவைகள் அனைத்தும் பத்தாம்பசலித்தனமானது, பழங்காலத்தை சேர்ந்தது என்று கூறி ஒதுக்கி விடுகின்றனர்.

ஆனால், முன்னோர்கள் பயன்படுத்திய சொற்களில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பது, இன்றைய தலைமுறையினர்களுக்கு தெரியவரவில்லை.

பரம்பரை

அதையடுத்து, முன்னோர்கள் கூறிய வார்த்தைகளில் ஒன்றுதான் மிக பிரபல வார்த்தையான பரம்பரை என்ற சொல்லாகும்.

ஒரு சில பெரிய செல்வந்தர்களை பற்றி பேசும்போது, அவர்கள் பரம்பரை பணக்காரர்கள், பரம்பரை மிராசுதாரர்கள் என்று கூறுவதுண்டு.

அல்லது நாங்கள் இந்த பரம்பரையை சேர்ந்தவர்கள் என்று பெருமையாக கூறுவார்கள்.

அவ்வாறு பெருமையாக கூறப்படுகின்ற பரம்பரை என்ற வார்த்தை எப்படி, யார் மூலமாக வந்தது என்று இன்றுவரை யாருக்கும் தெரியாது.

வருங்கால தலைமுறையினர்

முதல் தலைமுறை - நாம்

இரண்டாம் தலைமுறை - மகன், மகள்

மூன்றாம் தலைமுறை - பேரன், பேத்தி

நான்காம் தலைமுறை - கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி

ஐந்தாம் தலைமுறை - எள்ளுப்பேரன், எள்ளுப்பேத்தி என்று கூறுகின்றோம்.

முந்தைய தலைமுறையினர்

முதல் தலைமுறை - நாம்

இரண்டாம் தலைமுறை - அம்மா, அப்பா

மூன்றாம் தலைமுறை - பாட்டன், பாட்டி

நான்காம் தலைமுறை - பூட்டன், பூட்டி

ஐந்தாம் தலைமுறை - ஓட்டன், ஓட்டி

ஆறாம் தலைமுறை - சேயோன், செயோள்

ஏழாம் தலைமுறை - பரன், பரை

தமிழ் மொழியில் மட்டுமே

இந்த பரனும், பரையும் சேர்ந்துதான் பரம்பரை என்ற சொல்லானது.

நமக்கு முந்தைய ஏழாவது தலைமுறையை தான் பரம்பரை என்று கூறுகின்றோம்.

ஒரு தலைமுறை என்பது சராசரியாக 60 வருடங்கள் என்று வைத்து கொண்டால், ஏழு தலைமுறைக்கு 420 வருடங்கள் வருகின்றன.

அதன்படி ஈரேழு தலைமுறைக்கு 840 வருடங்கள் வருகின்றன.

பரம்பரை, பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறை என்று பொருளாகும்.

இவ்வாறு உறவு முறைகள் குறித்த விளக்கம் தமிழ் மொழியை தவிர வேறெந்த மொழிகளிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தமிழ் மொழிக்கு மட்டும் கிடைத்த பெருமையாகும்.



Follow Us on