பஞ்ச விருட்சங்களும் அதன் மருத்துவ பயன்களும்

தேவலோகத்தைச் சேர்ந்த ஐந்து தெய்வீக விருட்சங்களான வில்வம், பாதிரி, வன்னி, மா, மந்தாரை ஆகியவை பஞ்ச விருட்சங்கள் என்று போற்றப்படுகின்றன. இந்த ஐந்து மரங்களில் ஒன்றான வில்வ மரத்தை நாம் வணங்கும்போது, அது நம்மைப் புனிதப்படுத்துகிறது. அதையடுத்து, வில்வத்திற்கு மட்டுமன்றி பஞ்ச விருட்சங்களிலும் இருக்கும் மருத்துவ பயன்கள் குறித்து பார்க்கலாம்.

1. வில்வம்

வில்வம் சிவபெருமானுக்கு மட்டுமல்ல, முருகனுக்கும் மிகவும் பிரியமானது. முருகனின் அர்ச்சனை நாமங்களில், 'வில்வ பிரியா' என்பதும் ஒன்று. பெரும்பாலான சிவாலயங்களில் வில்வ விருட்சமே தல விருட்சமாக அமைந்திருக்கிறது. வில்வமரத்தின் வேர்கள் நிலத்திற்குள் ஆழமாக சென்று வேரோடு மண்ணைக் கவ்வி நிலச்சரிவு ஏற்படாமல் பாதுகாப்பது குறிப்பிடத்தக்கது.

வில்வமரத்தின் வேர் முதல் நுனி வரை அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை.

வில்வ இலைகள் ஊறவைக்கப்பட்ட நீரில், பாசிப்பருப்புப் பொடி தேய்த்துக் குளித்தால், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது.

வில்வ இலைத் தளிர்களை லேசாக வதக்கி, இமைகளில் ஒத்தடம் கொடுக்க, கண் தொடர்பான நோய்கள் நீங்கும்.

பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக அளவு இரத்தப்போக்கை, வில்வ இலையை அரைத்து சிறிதளவு சாப்பிட்டால் கட்டுப்படுத்தலாம்.

2. பாதிரி

பாதிரி மர இலைச் சாற்றைத் தலையில் தேய்த்துக் குளித்தால் உஷ்ணம் நீங்கும்.

பூக்களை அரைத்துத் தேனில் கலந்து சாப்பிட்டால் விக்கல் குணம் பெறும்.

பாதிரி வேரை உலரவைத்துப் பவுடராக்கிச் சாப்பிட்டால் சர்க்கரைப் புண், மூலம், இரத்த சோகை, இருமல், வயிற்றுவலி குணமடையும்.

பாதிரி பூக்கள், பட்டை, வேர், இலைகள் என அனைத்தும் சிறுநீரக நோய்க்கு நல்ல மருந்து எனக் கூறப்பட்டுள்ளது.

3. வன்னி

வன்னி மரப்பட்டைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, குடிநீராக பருகி வர, கருவுறும் வாய்ப்பு அமையும்.

வன்னி மரப்பட்டைகளில் உண்டாகும் பிசினை சேகரித்து, நிழலில் உலர்த்தி பொடியாக்கி, அதில் சிறிதளவை எடுத்து தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து பருகி வர, பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படும்.

4. மா

சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கு மா இலை ஒரு மிகச்சிறந்த மருந்தாகும்.

மா இலைகளை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதனை வடிகட்டி குடித்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள் வரும்.

மா இலையில் இரத்த அழுத்தத்தை குறைக்கும் ஹைப்போடென்சிவ் குணங்கள் உள்ளது.

மா இலை பொடியை நீரில் கரைத்து இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தால் விரைவில் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேற்றப்படும்.

மா இலையை கொதிக்க வைத்து தேன் சேர்த்து கசாயமாக குடித்தால் சில நிமிடங்களில் இருமல் குணமாகும்.

5. மந்தாரை

திருவாச்சி மரம் அல்லது மந்தாரை மரம் என்றழைக்கப்படுகிற இந்த மரம், இன்று மிக அரிதாகக் காணப்படும் மரமாகிவிட்டது. சிருவாச்சி, இருவாச்சி, திரு ஆத்தி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிற திருவாச்சி மரம் மனிதரின் வியாதிகள் தீர, பல்வேறு மருத்துவப் பலன்களை கொண்டுள்ளது.

திருவாச்சி இலைகள் இரத்த பேதி, இரத்த வாந்தியை போக்கும் ஆற்றல் உள்ளவை. மேலும், கை, கால் வலிகளைப் போக்கும் தன்மை மிக்கது,

திருவாச்சி பூக்களின் மொட்டுக்களை நீரில் இட்டு கொதிக்க வைத்து, காலை, மாலை இரு வேளை பருகி வர, சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் புண்கள் ஆறும்.

பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதீத இரத்தப் போக்கு குணமாகும். இரத்த மூல பாதிப்புகள் விலகும்.

சீரற்ற மாதவிலக்கு சீராகும், கருப்பை வளமாகும், சளியை வெளியேற்றும்.

பெண்களை பாதிக்கும் தைராய்டு வியாதிகளை போக்கும் ஆற்றல் மிக்கது. உடல் எடையையும் குறைக்கும் தன்மை கொண்டது.

திருவாச்சி மலர்களை, நிழலில் உலர்த்தி பொடியாக்கி, பனங்கற்கண்டு, தேன் கலந்து சாப்பிட, நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்புகள் அகன்று, வயிறு சுத்தமாகும். மேலும், தசையை வலுவாக்கி, உடலை வலுவாக்கும் இயல்பு மிக்கது.

திருவாச்சி இலைகளை துவையலாக செய்து உணவுடன் கலந்து சாப்பிடுவதன் மூலம் சுவாசப் பிரச்சனைகள், இதய பாதிப்புகள் போன்றவற்றுக்கு சிறந்த தீர்வாக உள்ளது.

திருவாச்சி இலைகளை அரைத்து சாறெடுத்து, சிறிதளவு இஞ்சி, பனங்கற்கண்டை கலந்து சாப்பிட வயிற்றில் உள்ள பூச்சிகளையும் வெளியேற்றும் தன்மை மிக்கது, ஜுரம், கை, கால் கோமூட்டு வலிகளைப் போக்கும்.

திருவாச்சி இலைகளில் உணவு சாப்பிட்டு வர, பசியின்மை, குடல் வியாதிகள் விரைவில் விலகும்.

தெய்வீக மரங்கள் தரும் பல்வேறு மருத்துவ பயன்கள் போன்று, உங்கள் உடல்நல ஆரோக்கியத்திற்கு தேவையான நோய் நீக்கும் மருந்தில்லா மருத்துவம், பழங்களும் பயன்களும், நோய் நீக்கும் காய்களும் கீரைகளும் போன்ற பயனுள்ள புத்தகங்களை உங்கள் வீட்டில் எப்போதும் வைத்திருக்க இங்கே அழுத்தவும்.

பஞ்ச விருட்சங்களும் அதன் மருத்துவ பயன்கள் குறித்தும் உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on