download_indicator

உடலுக்கு குளிர்ச்சி தரும் பனங்கிழங்கு

கற்பக விருட்சம் என்று அழைக்கப்படுகின்ற பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களும் பயன்தரக்கூடியது. பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும். பனங்கிழங்கை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் குறித்து மேலும் பார்க்கலாம்.

பயன்கள்

பனங்கிழங்கில் நார் சத்தும் அதிகம் இருப்பதால், இதை சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பனங்கிழங்கை சாப்பிட்டால் வயிற்று வலி, ஒற்றை தலைவலி உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.

பனங்கிழங்கிற்கு மஞ்சள் சுவை சேர்ப்பதுடன் கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.

வயிறு, மற்றும், சிறுநீர் பாதிப்பு பிரச்சனை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வலு கிடைக்கும்.

பனங்கிழங்கை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைப்பதை போன்று, இரத்தத்தில் சிகப்பணுக்களை அதிகரிக்கும் பீட்ரூட் போன்ற உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பழங்களும் பயன்களும், நோய் நீக்கும் காய்களும் கீரைகளும், நோய் நீக்கும் மருந்தில்லா மருத்துவம் என்ற புத்தகங்களை வைத்திருக்க இங்கே அழுத்தவும்.



Follow Us on