
பல் சொத்தை பற்றிய ஆராய்ச்சிகள் நடந்துகொண்டே இருந்தாலும், இந்தக் காரணத்தினால் தான் பல்லில் சொத்தை ஏற்படுகிறது என்பதை இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. பெரும்பாலானவர்கள், சொத்தைப் பல்லை கண்டுகொள்ளாமல் இருந்து விடுகின்றனர். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து இவற்றை சரிசெய்யா விட்டால் பாதிப்பு வேர் வரை இறங்கி, மற்ற பற்களையும் பாதித்துவிடும். இது வருவதற்கான காரணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
காரணங்கள்
சரியாக பல் துலக்காவிட்டால் பல சொத்தை வரலாம்.
பாக்டீரியாவும், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளையும் எடுத்துக் கொள்வதுமே பல் சொத்தை ஏற்பட முக்கியக் காரணங்கள் ஆகும்.
மரபு வழியாகவும், உமிழ்நீர் அடர்த்தியாக இருந்தாலும் பல் சொத்தை வர வாய்ப்பு அதிகம்.
கர்ப்பிணிகளுக்கு, கர்ப்பகாலத்தில் பல்லில் நோய்த் தொற்று இருந்து, அது தொப்புள் கொடி மூலமாக குழந்தைக்கு வரலாம்.
குழந்தைகள் இரவில், பால் பாட்டிலில் பால் குடித்தபடியே தூங்குவதன் மூலம், பற்களில் பால் தங்கி, சொத்தையை ஏற்படுத்திவிடும்.
அறிகுறிகள்
கருமையான கோடு போல் இருக்கும்.
தொட்டால் அந்த இடம் மிருதுவாக இருக்கும்.
சிலருக்கு தொட்டால் உள்ளே பல் போகும் அளவிற்கு குழியும் வந்திருக்கலாம்.
பல் குழியாகி ஆழமாகப் போவதைப் பொருத்து பாதிப்புகள் தெரியவரும்.
தொண்டை, கழுத்து , காது மற்றும் தலை ஆகிய இடங்களில் வலி இருக்கும்.
இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே பல மருத்துவரை அணுகி சரி செய்து கொள்வது அவசியமான ஒன்றாகும்.
பல் சொத்தை இருப்பவர்களுக்கு இக்கட்டுரை அனுப்பி பயனடைய செய்யுங்கள்.(ஷேர்)